முருங்கைக்காய் சிப்ஸ்
2021இல் வெளியான தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முருங்கக்காய் சிப்ஸ் (Murungakkai Chips) என்பது 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இது அறிமுக இயக்குநர் சிறீஜர் என்பவரால் எழுதி இயக்கப்பட்டது. லிப்ரா புரொடக்ஷன்ஸ், பர்ஸ்ட்மேன் பிலிம் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்திருந்தது.[1] இப்படத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.[2] படத்தின் இசையை இசையமைப்பாளர் தரண் குமார் மேற்கொண்டார்.[3] படம் 10 திசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[4][5]
Remove ads
கதை
புதுமணத் தம்பதிகள் அவர்களின் முதல் இரவில், ஒரு திட்டத்தோடு செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் - பையன் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். அந்த பெண் திருமணத்தை நிறைவு செய்வதை உறுதியாக இருக்கிறார். இறுதியில் வெற்றி பெறுவது யார்?
நடிகர்கள்
- அர்ஜுனாக சாந்தனு பாக்யராஜ்
- சாந்தியாக அதுல்யா ரவி
- அர்ஜுனின் தாத்தாவாக பாக்யராஜ்
- சாந்தியின் அத்தையாக ஊர்வசி
- லிங்குசாமியாக மனோபாலா
- பணம் கொடுப்பவராக முனீஷ்காந்த்
- கடனாளியாக யோகி பாபு
- மயில்சாமி
- ஜாங்கிரி மதுமிதா
- லொள்ளு சபா மனோகர்
- ராஜு ஜெயமோகன்
- உலகநாதனாக இரவீந்தர் சந்திரசேகரன்
இசை
படத்தின் ஒலிப்பதிவை தரண் குமார் மேற்கொண்டுள்ளார். ஒலிப்பதிவுத் தொகுப்பில் மூன்று பாடல்கள் இடம்பெற்றன. மேலும், இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியது.
படம் 10 திசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, விமர்சகர்களிடமிருந்து மோசமான விமர்சனங்களைப் பெற்றது.[6][7] இப்படம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads