மு. இராமலிங்கம்

From Wikipedia, the free encyclopedia

மு. இராமலிங்கம்
Remove ads

மு. இராமலிங்கம் (9 அக்டோபர் 1908 - 1 ஆகத்து 1974) ஈழத்து எழுத்தாளரும், வரலாற்றாசிரியரும், நாடகாசிரியரும், நாட்டுப் பாடல் ஆய்வாளரும் ஆவார். முருகரம்மான் என்ற பெயரிலும் எழுதியவர்.[1] மக்கள் கவிமணி என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் மு. இராமலிங்கம், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

நன்னித்தம்பி முருகேசு இராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட மு. இராமலிங்கம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பிறந்தவர். யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்று, இலங்கை இரயில்வே திணைக்களத்திலும், இறைவரித் திணைக்களத்திலும் பணியாற்றியவர்.[2] நாட்டார் இலக்கியம், நாட்டார் பாடல்கள் பற்றி எழுதியும், பாடல்கள் சிலவற்றைத் தொகுத்தும் பல இதழ்களில் எழுதினார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை மிக்கவராகத் திகழ்ந்த இவரின் நாட்டார் வழக்காற்றியல் பற்றிய ஆக்கங்களை தமிழ்நாட்டுப் பத்திரிகைகளும் வெளியிட்டன.[3]

இறைவரித்திணைக்களத்தில் பணியாற்றிய போது கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்தார். வெள்ளவத்தை மு. இராமலிங்கம் என்றே எழுதியவர் ஓய்வு பெற்று யாழ்ப்பாணம் சென்றபின் வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் என்று எழுதி வந்தார். 1943 இல் அசோகமாலா என்ற நாடக நூலை முருகரம்மான் என்ற புனை பெயரில் வெளியிட்டார்.

Remove ads

வெளியிட்ட நூல்கள்

மு. இராமலிங்கம் இரண்டு நாடக நூல்களையும், நாட்டார் பாடல்கள் பற்றி நான்கு நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.[1] இவற்றை விடப் பல நூல்களை தொகுத்து வெளியிட்டுள்ளார்.

  • அசோகமாலா (நாடகம், 1943)
  • நவமணி (நாடகம்)
  • இலங்கை நாட்டுப் பாடல்கள்
  • கிராமக் கவிக்குயில்களின் ஒப்பாரிகள் (1960)
  • வட இலங்கையர் போற்றும் நாட்டார் பாடல்கள்
  • கள்ளக் காதலர் கையாண்ட விடுகதைகள்

தொகுப்பு நூல்கள்

  • கனகி புராணம் - நட்டுவச் சுப்பையனார் (மூலம்), சிவங். கருணாலய பாண்டியனார் (விரிவுரை), 1961
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads