மு. செல்வராசு

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

மு. செல்வராசு என அறியப்படும் முனியன் செல்வராசு (16 மார்ச்சு 1957- 13 மே 2024) ஒரு தமிழ்நாட்டு அரசியலர் ஆவார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (இபொக) சார்பில் இந்திய நாடாளுமன்ற மக்களவையில் நாகப்பட்டினம் தொகுதி உறுப்பினராக 1989-91, 1996-99, 2019-24 காலகட்டங்களில் பணியாற்றினார்.

விரைவான உண்மைகள் மு. செல்வராசு, முன்னையவர் ...
Remove ads

தொடக்க வாழ்க்கை

இன்றைய திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கப்பலுடையான் எனும் சிற்றூரில் வாழ்ந்த குஞ்சம்மாள் -முனியன் இணையரின் மகனாக 16 மார்ச் 1957 அன்று பிறந்தார் செல்வராசு. உழவர் இயக்கத்தில் பெற்றோர் செயல்பட்டு வந்த நிலையில், அவரும் சிறுவயதிலேயே பொதுவுடைமை இயக்கத்தில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார்.[1]

திருவாரூரில் உள்ள திரு. வி. க. அரசினர் கலைக் கல்லூரியில், இளங்கலைப் பட்டம் பெற்றார்.

Remove ads

குடும்ப வாழ்க்கை

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (இபொக) சார்பில் முன்னதாக 1977-79 வரை நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றிப் படுகொலையான எஸ். ஜி. முருகையனின் மூத்த மகள் கமலவதனத்தை வாழ்விணையராக ஏற்றார் செல்வராசு. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இக் குடும்பம், திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி எனும் ஊரில் வாழ்ந்துவந்தது.

அரசியல்

கட்சிப் பொறுப்புகள்

1975 முதல் இபொக-வில் முழுநேர ஊழியராகப் பணியாற்றத் தொடங்கினார்.[2]

போட்டியிட்ட தேர்தல்கள்

மேலதிகத் தகவல்கள் தேர்தல், தொகுதி ...

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி உறுப்பினராக மொத்தம் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வராசு, தமிழ்நாட்டின் காவிரி ஆற்றுப் படுகை மாவட்டங்களுக்குத் தொடர்வண்டித் திட்டங்கள் வேண்டியும், அப்பகுதி வேளாண் மக்களின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களை முன்னெடுத்தார்.[1] 2019-இல் மட்டும் மொத்தம் 29 மக்களவை உரையாடல்களில் கலந்து கொண்டு பங்களிப்பைச் செலுத்தியுள்ளார்.[7]

மறைவு

சிறுநீரகப் பாதிப்பு காரணமாக 2024-க்கு முன்பாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட செல்வராசுவுக்கு அவர் சகோதரி சாரதாமணி சிறுநீரக தானம் செய்தார். பிறகு சனவரி 2024-இல் மூச்சுத்திணறல் காரணமாகத் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.[8][9] அதன்பின் சிறுநீரகம் மற்றும் இதயச் சிக்கலால் மே 3 அன்று சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மே 13 விடியற்காலையில் தன் 68-ஆம் அகவையில் காலமானார். அப்போது அவர் மக்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைய 10 நாள்களே இருந்தன.

செல்வராசுவின் மறைவுக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடல், சித்தமல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் இறுதி வணக்கத்துக்காக வைக்கப்பட்டது. மே 14 அன்று காலையில் அவரது இல்லத்தின் முன்பு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இபொக தேசிய செயலாளர் நாராயணன், மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், திமுக பொருளாளர் த.ரா.பாலு உள்ளிட்டோர் செல்வராசுவுக்கு அஞ்சலி செலுத்திப் பேசினர்.[10] பின் அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.[11]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads