2019 இந்தியப் பொதுத் தேர்தல்
இந்தியாவின் 17 ஆவது மக்களவைத் தேர்தல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
2019 இந்தியப் பொதுத் தேர்தல் (2019 Indian general election) பதினேழாவது மக்களவைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 2019 ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடத்தப்பட்டது. மே 23 இல் வாக்குகள் எண்ணப்பட்டு, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[1][2][3][4] ஏறத்தாழ 900 மில்லியன் இந்தியக் குடிமக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். இத்தேர்தலில் 67% இற்கும் அதிகமானோர் வாக்களித்தனர். இத்தேர்தலிலேயே இந்தியத் தேர்தல் வரலாற்றில் மிக அதிகமானோர் வாக்களித்தனர்.[5] அத்துடன் மிக அதிகமான பெண்கள் இத்தேர்தலிலேயே வாக்களித்திருந்தனர்.[6][குறிப்பு 1]
இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் முடிவுகளின் படி, மொத்தமாக தேர்தல்கள் நடந்த 542 தொகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 303 இடங்களைக் கைப்பற்றி, பெரும்பான்மையைப் பிடித்தது.[8] பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெற்றது.[9] அதேவேளையில், இந்திய தேசிய காங்கிரசு (இதேகா) 52 இடங்களையும், காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 87 இடங்களைக் கைப்பற்றியது. ஏனைய கட்சிகள் 103 இடங்களைக் கைப்பற்றின. மக்களவையில் அதிகாரபூர்வமான எதிர்க்கட்சியாக இருப்பதற்கு ஒரு கட்சி குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும், அல்லது நடப்பு நாடாளுமன்றத்தில் குறைந்தது 55 இடங்களைக் கைப்பற்றியிருக்க வேண்டும். இரண்டாவது அதிகப்படியான இடங்களை (52) கைப்பற்றிய இந்திய தேசிய காங்கிரசு கட்சி இரண்டாவது தடவையாக அதிகாரபூர்வமான எதிர்க்கட்சி என்ற நிலையைப் பெறத் தவறியது. இதனால், இந்தியாவில் அதிகாரபூர்வமான எதிர்க்கட்சி இம்முறையும் இடம்பெறமாட்டாது.[10][11][12]
ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களும் இப்பொதுத் தேர்தல்களுடன் இணைந்து நடத்தப்பட்டன.[13][14]
Remove ads
தேர்தல் முறைமை
543 மக்களவை உறுப்பினர்கள் ஒரு-உறுப்பினர் கொண்ட தனித் தனித் தொகுதிகளில் இருந்து அதிகப்படியான வாக்குகளைப் பெறுபவர் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆங்கிலோ இந்திய சமூகத்தில் இருந்து தகுந்தளவு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என இந்தியக் குடியரசுத் தலைவர் கருதும் பொருட்டு, அவர் மேலதிகமாக இரண்டு உறுப்பினர்களை அச்சமூகத்தில் இருந்து தேர்ந்தெடுத்து நியமிக்கலாம்.[15] 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்தியக் குடிமக்கள் வாக்களிக்கும் தகுதி பெறுவர். வாக்களிக்கத் தகுதியானவர்கள் இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.[16]
இந்திய அரசியலமைப்பின் படி, மக்களவைக்கான தேர்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் முன்கூட்டியே கலைக்கும் போது நடைபெறுகின்றன.[17] 2019 மார்ச் 10 இல் பதினேழாவது மக்களவைக்கான தேர்தல்கள் பற்றிய அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் 2019 மார்ச் 10 இல் அறிவித்தது. அதன் பின்னர் தேர்தல் ஆணையத்தின் நன்னடத்தைக் கோட்பாடு விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வந்தன.[18]
Remove ads
தேர்தல் அட்டவணை

2019 மார்ச் 10 ஆம் நாள் 7-கட்டத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டது.[19] வாக்குகள் 2019 மே 23 இல் எண்ணப்பட்டன. பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஏழு கட்டங்களிலும் தேர்தல்கள் நடைபெற்றன. சம்மு காசுமீர் மாநிலத்தின் அனந்த்நாக் தொகுதியில் தேர்தல் வன்முறைகள் காரணமாக மூன்று கட்டங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.[20]
- வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை (கீழே பார்க்க).
மறு வாக்குப்பதிவு
- வேலூர், தமிழ்நாடு: வேலூரில் ₹11 கோடி (ஐஅ$1.3 மில்லியன்) பணம் திமுக தலைவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. வாக்காளர்களுக்குக் கையூட்டுத் தருவதற்காக இவை வைத்திருக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.[21] திரட்டப்பட்ட ஆதாரங்களின் படி, இந்தியத் தேர்தல் ஆணையம் ஏப்ரல் 18 தேர்தலை வேலூர் தொகுதியில் இடைநிறுத்தியது. திமுக தலைவர்கள் இக்குற்றச்சாட்டை மறுத்து, இதனை ஓர் அரசியல் சதி எனக் குற்றஞ்சாட்டியது.[22]
- கிழக்கு திருபுரா, திரிபுரா: சட்டம் ஒழுங்கு சர்ச்சை காரணமாக இந்தியத் தேர்தல் ஆணையம் இத்தேர்தல் தொகுதியில் தேர்தலை ஏப்ரல் 18 இலிருந்து ஏப்ரல் 23 இற்குத் தள்ளிப் போட்டது.[23]
Remove ads
அரசியல் கட்சிகளும் கூட்டணிகளும்

50 இற்கும் மேற்பட்ட கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிட்டன. இவைகளில் பெரும்பாலானவை பிராந்தியக் கட்சிகளாகும். போட்டியிட்ட முக்கிய கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி (பாஜக), இந்திய தேசிய காங்கிரசு (இதேகா) ஆகியவையாகும். 1984 முதல் 2009 வரை எந்தக் கட்சியும் மக்களவையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை. இதனால் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது இந்தியாவில் வழமையானது. 2019 தேர்தலில், நான்கு தேர்தலுக்கு-முந்தைய முக்கிய கூட்டணிகள் அமைக்கப்பட்டன. இவை பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (தேஜகூ), காங்கிரசு தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, மகாகத்பந்தன் என அழைக்கப்படும் பெரும் கூட்டணி, இடது முன்னணி ஆகியனவாகும். 2019 தேர்தலில் முதல் தடவையாக காங்கிரசு (421) கட்சியைவிட பாஜக (437) அதிக தொகுதிகளில் போட்டியிட்டது.[24][25]
காங்கிரசு கட்சி பாஜக உடன் நேரடியாக மோதக்கூடிய மாநிலங்களில் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டது. அவை: இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்டம், ராஜஸ்தான், குசராத்து, மத்தியப் பிரதேசம், சத்தீசுகர் ஆகியவையாகும். சம்மு காசுமீர், பீகார், தமிழ்நாடு, மகாராட்டிரம், கருநாடகம், சார்க்கண்ட், கேரளம் ஆகிய மாநிலங்களில் காங்கிரசு மாநிலக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், தில்லி, பஞ்சாப், அரியானா, கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக் கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியவில்லை.[26]
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குமாரி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 76 தொகுதிகளுக்கு போட்டுயிட மகாகத்பந்தன் என்ற கூட்டணியை 2019 சனவரியில் அறிவித்தார்கள். அமேதி, ராய் பரேலி ஆகிய தொகுதிகளை காங்கிரசுக்கும், மேலும் இரண்டு தொகுதிகளை வேறு கட்சிகளுக்கும் போட்டியிடாமல் விட்டுக் கொடுத்தார்கள். இக்கூட்டணியில் காங்கிரசு இடம்பெறவில்லை.[27]
தேசியக் கூட்டணிகள்
Remove ads
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் 2019
திமுக கூட்டணியில் காங்கிரசு (புதுச்சேரி உட்பட) 10 தொகுதிகளிலும், மார்க்சியப் பொதுவுடமைக் கட்சியும், இந்தியப் பொதுவுடமைக் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தலா இரண்டு தொகுதிகளிலும் மதிமுக, கொங்கு தேசிய முன்னேற்றக் கட்சி, இந்திய யூனியன் முசுலிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிட்டன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது போக திமுக மொத்தம் இருபது இடங்களில் போட்டியிட்டது.
அதிமுக கூட்டணியில் பாமக ஏழு தொகுதிகளிலும், பாஜக ஐந்து தொகுதிகளிலும் தேமுதிக நான்கு தொகுதிகளிலும் புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமாகா ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. புதுச்சேரியில் என். ஆர். காங்கிரசு போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது போக அதிமுக மொத்தம் இருபது இடங்களில் போட்டியிட்டது.
நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டன.
அமமுக கட்சியானது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாததால் இந்த அணிக்குப் பொதுவான சின்னம் வழங்கியபோதும், அவர்கள் சுயேச்சைகளாகவே கருதப்படுவர் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.
தமிழ்நாட்டில் கூட்டணிகள்
தேசிய ஜனநாயகக் கூட்டணி
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
Remove ads
கேரளா
கேரளாவில் பாசக 12.93% வாக்குகளும் காங்கிரசு 37.27% வாக்குகளும் இந்திய பொதுவுடமை கட்சி 6.05% வாக்குகளும் மார்க்சிய பொதுவுடமை கட்சி 25.83% வாக்குகளும் இந்திய யூனியன் முசுலிம் லீக் 5.45% வாக்குகளும் பெற்றனர்.
காங்கிரசு 15 தொகுதிகளிலும், மார்க்சிய பொதுவுடமை கட்சி ஓர் தொகுதியிலும் இந்திய யூனியன் முசுலிம் லீக் இரு தொகுதிகளிலும் கேரளா காங்கிரசு (மணி) ஓர் தொகுதியிலும் புரட்சிகர சோசலிசுடு கட்சி ஓர் தொகுதியிலும் வென்றனர்.
திருவனந்தபுரத்தில் காங்கிரசின் சசி தரூர் வென்றார், பாசக இரண்டாவதாக வந்தது.
Remove ads
தெலுங்கானா
தெலுங்கானாவில் பாசக 19.45% வாக்குகளும் காங்கிரசு 29.48% வாக்குகளும் தெலுங்கானா ராசுட்டிரிய சமிதி 41.29% வாக்குகளும் மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (மஜ்லிஸ்) 2.78% வாக்குகளும் பெற்றனர்.
ஐதராபாத்தில் மஜ்லிஸ் கட்சி வென்றது. அடிலாபாத்திலும் கரீம்நகரிலும் நிசாமாபாத்திலும் செகந்திராபாத்திலும் பாசக வென்றது. நிசாபாத்தில் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா தோற்றார். நல்கொண்டாவிலும் போங்கிரிலும் மல்கஜ்கிரியிலும் காங்கிரசு வென்றது. தெலுங்கானா இராட்டிர சமிதி ஒன்பது தொகுதிகளில் வென்றது.
Remove ads
ஆந்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசத்தில் பாசக 0.96% வாக்குகளும் காங்கிரசு 1.29% வாக்குகளும் தெலுங்கு தேசம் 39.59% வாக்குகளும் ஒய் எசு ஆர் காங்கிரசு 49.15% வாக்குகளும் பெற்றனர்.
தெலுங்கு தேசம் மூன்று தொகுதிகளிலும் ஒய் எசு ஆர் காங்கிரசு 22 தொகுதிகளிலும் வென்றனர்.
கருநாடகம்
காங்கிரசு பெங்களூர் புறநகரிலும் ஜனதாதளத்தின் பிராஜ்வால் ரேவண்ணா ஸாசனிலும் கட்சிசாரா சுமலதா ஆம்பரீசு மாண்டியாவிலும் வென்றனர். நிகில் குமாரசாமி மாண்டியாவில் சுமலதாவிடம் தோற்றார். நிகில் குமாரசாமி தேவகவுடாவின் பேரன் முதல்வர் குமாரசாமியின் மகன். பிராஜ்வால் ரேவண்ணாவும் தேவகவுடாவின் பேரன் (குமாரசாமியின் அண்ணன் மகன்).
Remove ads
மகாராட்டிரா
ஔரங்காபாத்தில் மஜ்லிஸ் கட்சி வென்றது, பாராமதியிலும் சாடராவிலும் சிரூரிலும் ராஜ்காட்டிலும் தேசியவாத காங்கிரசும் சந்திரபூரில் காங்கிரசும் வென்றன. பாசக 23 தொகுதிகளிலும் சிவசேனா 18 தொகுதிகளிலும் அமராவதி தொகுதியில் கட்சி சாரா வேட்பாளர் நவ்நித் இரவி ராணாவும் வென்றனர்.
ஒடிசா
மேற்கு வங்காளம்
உத்திரப் பிரதேசம்
மிர்சாபூரிலும் ரோபர்ட்ஸ்கஞ்சிலும் அப்னாதளம் வென்றது.
திரிபுரா
பீகார்
கிசான்கன்ஞ் என்ற தொகுதியில் காங்கிரசு வென்றது.
சம்மு காசுமீர்
சம்மு, உதன்பூர், லடாக்கில் பாசகவும் சிறிநகர், பாராமுல்லா, அனந்நாக்கில் தேசியமாநாடும் வென்றன.
மணிப்பூர்
மேகாலயா
கோவா
அசாம்
கோக்ரச்கரில் கட்சி சாராதவரும் துப்ரியில் அனைந்திந்திய ஐக்கிய சனநாயக முன்னனி வென்றனர்.
வாக்களிப்பு வீதம்
முதல் கட்ட வாக்களிப்பில், 91 மக்களவைத் தொகுதிகளுக்கு 142 மில்லியன் வாக்காளர்களில் 69.50 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.[55] 2014 தேர்தல்களில் இந்த வாக்களிப்பு வீதம் 68.77% ஆக இருந்தது.[55] இரண்டாம் கட்டத்தில், 95 மக்களவைத் தொகுதிகளுக்கு 156 மில்லியன் வாக்காளர்களில் 69.44% விழுக்காட்டினர் வாக்களித்தனர். 2014 இல் இது 69.62% ஆக இருந்தது.[55] மூன்றாம் கட்டத்தில், 116 மக்களவத் தொகுதிகளுக்கு 189 மில்லியன் வாக்காளர்களில்[55] 68.40 விழுக்காட்டினர் வாக்களித்தனர். 2014 இல் இது 67.15% ஆக இருந்தது.[55] நான்காம் கட்டத்தில், 72 தொகுதிகளுக்கு 128 மில்லியன் வாக்காளர்களில் 65.51 விழுக்காட்டினர் வாக்களித்தனர். 2014 இது 63.05% ஆக இருந்தது.[56] ஆறாம் கட்டத்தில், 101 மில்லியன் வாக்காளரில் 63.5 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.[57]
2019 தேர்தலில் இறுதி வாக்களிப்பு வீதம் 67.11 ஆகும். இது மக்களவைத் தேர்தல் வரலாற்றில் மிக அதிகமானதாகும். 2014 இல் இது 65.95% ஆக இருந்தது.[58]
- First estimate by the ECI. Final numbers to be announced later.
- தமிழ்நாட்டில் உள்ல 39 தொகுதிகளில், வேலூர் தொகுதியில் வாக்களிப்பு இரத்துச் செய்யப்பட்டது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
தேர்தல் ஆணையத்தின் கட்டளைப்படி இந்திய மக்களவைத் தேர்தல் 2019 முடிந்த நாளான மே மாதம், 19-ஆம் நாள், மாலை 6.30க்கு பின் செய்தி ஊடகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாயின.
தேர்தல் முடிவுகள்
2019 மே 23 இல் வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்பட்டன. இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட முடிவுகளின் படி, கட்சி-வாரியாக 542 தொகுதி முடிவுகள் பின்வருமாறு:[64]
352 | 91 | 99 |
தேஜகூ | ஐமுகூ | ஏனையவை |
2014 மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோதி தலைமையிலான பாஜக 30 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாக தனிப் பெரும் கட்சியாக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. 2019 தேர்தலில் பாஜக 303 இடங்களைக் கைப்பற்றியது. இது ஆட்சியமைக்கத் தேவையான 272 ஐ விட 31 இடங்கள் அதிகமானதாகும். கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து மொத்தம் 352 இடங்களைக் கைப்பற்றியது.[66][67] இந்திய விடுதலைக்குப் பின்னர் ஒரே கட்சி மிகப் பெரும்பான்மையுடன் மக்களவைக்குத் தெரிவாகியது இது இரண்டாவது தடவையாகும்.[68] பாஜகவிற்கு மட்டும் 41% வாக்குகள் கிடைத்தன. இது 2014 தேர்தலை விட 10% அதிகமாகும்.[68]
அடிக்குறிப்புகள்
- அருணாசலப் பிரதேசம், கேரளம், உத்தராகண்டம் உட்பட 9 மாநிலங்களில் ஆண்களை விடப் பெண்களே அதிகம் வாக்களித்தனர்.[7]
- வேலூர் தொகுதிக்கான தேர்தல் தாமதமாகி ஆகத்து 5, 2019 அன்று நடந்தது.
- இலட்சத்தீவு தொகுதியில் கூட்டணி உடன்பாடில்லாமல் போட்டியிட்டது
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads