மு. பெ. சாமிநாதன்

தமிழ்நாட்டு அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

மு. பெ. சாமிநாதன் (M. P. Saminathan) என்பவர் தமிழக அரசியல்வாதியும், முன்னாள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், தற்போதைய செய்தித்துறை அமைச்சரும் ஆவார்.

விரைவான உண்மைகள் மு. பெ. சாமிநாதன், தமிழக செய்தித்துறை துறை அமைச்சர் ...
Remove ads

கல்வி

சாமிநாதன் ஈரோட்டில் 5 மே 1964 பிறந்தார். இவர் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தூர் ஆகும். இவர் சமூகவியலில் இளங்கலைப் படிப்பை கோயம்புத்தூர் பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரியில் முடித்துள்ளார்.

அரசியல்

சாமிநாதன் தமிழக சட்டமன்றத்துக்கு வெள்ளகோயிலில் தொகுதியிலிருந்து மூன்று முறை (1996, 2001, 2006) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திருப்பூர் மாவட்ட தி. மு. க செயலாளராக இருந்தார்.[1]

இவர் முன்னாள் அமைச்சர் துரை. ராமசாமியை தோற்கடித்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] முன்னாள் அமைச்சரை எதிர்த்து போட்டியிட்டு 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது இவர் பெற்ற வாக்குகள் 33800 ஆகும். 12 மே 2006 அன்று தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக நியமிக்கபட்டார்.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கேயம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக செய்தித்துறை (செய்தி மற்றும் விளம்பரம், திரைப்பட தொழில்நுட்பவியல் மற்றும் திரைப்படச்சட்டம், பத்திரிகை அச்சுக்காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்) அமைச்சசராக பதவியேற்றார்.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads