மூன்றாம் ஏட்ரியன் (திருத்தந்தை)
திருத்தந்தை From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருத்தந்தை மூன்றாம் ஏட்ரியன் (இலத்தீன்: Adrianus III; இறப்பு ஜூலை 885) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 17 மே 884 முதல் 885இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார்[1] இவர் உரோமை நகரில் பிறந்தவர்.
புனித உரோமைப் பேரரசின் வாரிசு குறித்த சர்ச்சையினை தீர்க்க[2] மூன்றாம் சார்லசு மன்னனில் அழைப்பின் பேரில் செருமனி செல்லும் வழியில் ஜூலை 885இல் மோதினாவில் உள்ள சான் செசாரியோ சல் பனரோவில் இவர் இறந்தார். மோதினாவின் நோனான்தோலாவில் உள்ள புனித சில்வெஸ்த்ரோ மடத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்டர்.[3] இந்த நிகழ்வு சுமார் 1122இல் இவ்வாலய கதவுகளில் பொறிக்கப்பட்டது. இவரின் மீப்போருட்கள் அவ்வாலய மைய பீடத்தின் அடியில் உள்ளது.
இவரின் பக்திமுயற்சிகள் 1891இல் உறுதிசெய்யப்பட்டது. இவரின் விழாநாள் 8 ஜூலை ஆகும்.[4]
Remove ads
இவற்றையும் பார்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads