திருத்தந்தையர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

திருத்தந்தையர்களின் பட்டியல்
Remove ads

திருத்தந்தையர்களின் பட்டியல் (List of Popes) என்பது கத்தோலிக்க கிறித்தவத் திருச்சபை "திருத்தந்தையர்" என்றும் "போப்பாண்டவர்" என்றும் குறிப்பிடுகின்ற உரோமை ஆயர்களின் பெயர் வரிசையை வரலாற்று முறையில் அமைக்கின்ற அடைவு ஆகும். வத்திக்கான் நகரத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையிடம் ஒவ்வொரு ஆண்டும் "திருத்தந்தை மேலிடப் புள்ளிவிவரத் தொகுப்பு" (Annuario Pontificio) என்னும் பெயரில் வெளியிடுகின்ற நூல் அதிகாரப்பூர்வமானதாகக் கருதப்படுகிறது. இப்புள்ளிவிவரத் தொகுப்பில் இன்று கத்தோலிக்க திருச்சபையின் தலைவராய் இருக்கும் 16ஆம் ஆசீர்வாதப்பர் (பெனடிக்ட்) வரலாற்றில் 265ஆம் திருத்தந்தை என்று குறிக்கப்படுகிறார். அப்பட்டியலே கீழே தரப்படுகிறது.[1]

Thumb
புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள திருத்தந்தையர்களின் பெயர்ப் பட்டியல். காப்பிடம்: புனித பேதுரு பேராலயம், வத்திக்கான் நகரம்
Remove ads

திருத்தந்தை என்னும் பெயர்

கத்தோலிக்க திருச்சபை வழக்கப்படி, உரோமை ஆயர் "திருத்தந்தை" (போப்பாண்டவர்) என்று அழைக்கப்படுகிறார். இப்பெயர் இலத்தீன் மொழியில் "Papa" என்பதாகும். அதன் பொருள் "தந்தை", "அப்பா" ஆகும். இதுவே ஆங்கிலத்தில் "Pope" என்றாகியது. அதனடிப்படையில் "போப்பாண்டவர்" என்னும் சொல் தமிழில் வரலாயிற்று.

வரலாற்றில், திருத்தந்தையரைக் குறிக்க வேறு சில பெயர்களும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. "இறையடியார்க்கு அடியார்" (Servant of the Servants of God) என்னும் பட்டம் திருத்தந்தை மக்களுக்குப் பணிபுரியவே பதவி ஏற்கிறார் என்பதைக் காட்டுகிறது. வேறு சில பெயர்கள் பண்டைய உரோமைப் பேரரசின் மரபுவழி வந்தவை ஆகும். உரோமைப் பேரரசனுக்கு "Pontifex" (Pontiff) என்றொரு பட்டம் இருந்தது. அதற்கு "பாலமாக அமைபவர்" ("பெருந்தலைவர்") என்பது பொருள். அதை அடியொற்றி, திருத்தந்தை "Summus Pontifex" (Supreme Pontiff) என்றும் பெயர் கொண்டுள்ளார். இன்னொரு பெயர் Vicarius Christi (Vicar of Christ) என்பதாகும். இதன் பொருள் "கிறிஸ்துவின் பதிலாள்". வழக்கமாக அவர் Sanctus Pater (Holy Father), அதாவது "தூய (திரு) தந்தை" என்னும் பெயரால் அறியப்படுகிறார்.

வரலாற்றுத் தகவல்கள் கிடைத்ததையொட்டி, திருத்தந்தையரின் பெயர்ப்பட்டியலில் பலமுறை திருத்தங்கள் செய்யப்பட்டன. 2001ஆம் ஆண்டு நிகழ்ந்த திருத்தம் துல்லியமான வரலாற்றுப் பார்வையோடு செய்யப்பட்டது.

புரட்டஸ்டாண்டு என்று அழைக்கப்படும் சீர்திருத்த சபைகளும் கீழை மரபுச் சபைகளும் திருத்தந்தையை உரோமை ஆயர் என்று ஏற்றபோதிலும் அவருக்கு அனைத்துலத் திருச்சபைமீது நிர்வாகப் பொறுப்பு உண்டு என ஏற்பதில்லை. கத்தோலிக்க கிறித்தவ சபைக் கருத்துப்படி, திருத்தந்தை இயேசுவின் முதன்மைச் சீடராகிய பேதுருவின் வாரிசு என்னும் முறையில் அனைத்துலத் திருச்சபைக்கும் தலைவராகவும் ஒற்றுமையின் அடையாளமாகவும் உள்ளார்.

Remove ads

கால ஒழுங்குப்படியான திருத்தந்தையர்களின் பட்டியல்

1 - 5ஆம் நூற்றாண்டுகள்

முதலாம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, பணிக்காலம் ...

2ஆம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, பணிக்காலம் ...

3ஆம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, பணிக்காலம் ...

4ஆம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, பணிக்காலம் ...

5ஆம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, பணிக்காலம் ...

6 - 10ஆம் நூற்றாண்டுகள்

6ஆம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, பணிக்காலம் ...

7ஆம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, பணிக்காலம் ...

8ஆம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, பணிக்காலம் ...

9ஆம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, பணிக்காலம் ...

10ஆம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, பணிக்காலம் ...

11 - 15ஆம் நூற்றாண்டுகள்

11ஆம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, பணிக்காலம் ...

12ஆம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, பணிக்காலம் ...

13ஆம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, பணிக்காலம் ...

14ஆம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, பணிக்காலம் ...

15ஆம் நூற்றாண்டு

  • R இத்திருத்தந்தை பதவி துறந்தார்.
  • B எட்டாம் இன்னசெண்ட், மற்றும் நான்காம் யூஜின் என்பவருக்கு முன் பதவியேற்ற ஏறக்குறைய அனைத்துத் திருத்தந்தையரின் பிறந்த நாள் துல்லியமாகத் தெரியவில்லை. எனவே கீழ்வரும் பட்டியலில் மிகக் குறைந்த ஊக வயது தரப்பட்டுள்ளது.
மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, காலம் ...

16 - 20ஆம் நூற்றாண்டுகள்

16ஆம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, காலம் ...

17ஆம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, காலம் ...

18ஆம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, காலம் ...

19ஆம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, காலம் ...

20ஆம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, காலம் ...

21ஆம் நூற்றாண்டு

மேலதிகத் தகவல்கள் எண் வரிசை, காலம் ...
Remove ads

திருத்தந்தையர்களின் பட்டியலின் அமைப்பு குறித்த விளக்கம்

திருத்தந்தையர்களின் பெயர்களைத் தமிழில் ஆக்கும்போது மூல வடிவத்தின் ஒலிமுறை கையாளப்படுகிறது. சில பெயர்களுக்குக் கிறித்தவ மரபில் தமிழ் வடிவங்கள் ஏற்கனவே உள்ளன. அவை அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன. அத்தகைய பெயர்களின் பட்டியல் கீழ்வருமாறு:

மேலதிகத் தகவல்கள் பெயரின் ஆங்கில வடிவம், பெயரின் தமிழ் வடிவம் ...
  • எதிர்-திருத்தந்தையர்கள் அல்லது எதிர்-பாப்புகள் இப்பட்டியலில் இடம் பெறவில்லை.[4]
  • பெலிக்ஸ் என்னும் பெயருடைய திருத்தந்தையர்களின் வரிசை எண், எதிர் திருத்தந்தையர்களை சேர்க்காமல் கூடியதாகும்[4]
  • இருபதாம் யோவான் என்ற பெயரைக் கொண்ட திருத்தந்தையாக யாரும் இருக்கவில்லை. ஆதலால் 11ஆம் நூற்றாண்டில் சிறு குழப்பம் நிலவியது.[5]
  • ஸ்தேவான் (தேர்வான திருத்தந்தை) திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டு ஆயர்நிலை திருப்பொழிவு பெறுவதற்கு முன் இறந்ததால் கத்தோலிக்க திருச்சபையின் பட்டியலில் திருத்தந்தையாக எண்ணப்படுவதில்லை.
  • மரீனுஸ் மற்றும் மார்ட்டின் என்னும் பெயர்களுக்கிடையே இருந்த குழப்பத்தால் "இரண்டாம்" மற்றும் "மூன்றாம்" வரிசை எண்களை விடுத்து நான்காம் மார்ட்டின் என்று ஒரு திருத்தந்தை பெயர் ஏற்றுக்கொண்டார்.[6]
  • இரண்டாம் டோனுஸ் என்னும் பெயரிலோ யோவான்னா என்ற பெயரிலோ திருத்தந்தையர் இருந்ததற்கான வரலாற்று ஆதாரம் இல்லை.[7]
  • இருபத்திமூன்றாம் யோவான் என்னும் பெயர் கொண்ட ஒரு எதிர்-திருத்தந்தை வரலாற்றில் இருந்த போதிலும் அதே பெயரைக் கர்தினால் ஜியுசேப்பே ரொன்கால்லி அக்டோபர் 28, 1958இல் தமதாகத் தேர்ந்துகொண்டார்.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads