மூன் நைட் (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மூன் நைட் (ஆங்கிலம்: Moon Knight) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அதிரடி மீநாயகன் தொலைக்காட்சி குறுந்தொடர் ஆகும். இந்த தொடர் மூன் நைட் என்ற மார்வெல் காமிக்சு கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு டிஸ்னி+[4][5] ஓடிடி தளத்திற்காக ஜெரமி இசுலேட்டர் என்பவர் உருவாக்கியுள்ளார்.

விரைவான உண்மைகள் மூன் நைட், வகை ...

இந்த தொடர் மார்வெல் ஸ்டுடியோஸ்[6] தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி ஆகும்.[7] அத்துடன் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது.

நடிகர் ஆஸ்கர் ஐசக்[8][9] என்பவர் மார்க் இசுபெக்டர் மற்றும் மூன் நைட் ஆகிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் தொடர் ஆவணி 2019 இல் அறிவிக்கப்பட்டது, கார்த்திகை மாதத்தில் ஜெரமி இசுலேட்டர் பணியமர்த்தப்பட்டார். ஐப்பசி 2020 இல் தொடரின் நான்கு அத்தியாயங்களை இயக்குவதற்கு முகமது தியாப்[10] பணியமர்த்தப்பட்டார், ஜஸ்டின் பென்சன்[11] மற்றும் ஆரோன் மூர்ஹெட் ஆகிய இருவரும் தை 2021 இல் தொடரில் இணைந்து மற்ற இரண்டு அத்தியாயங்களையும் இயக்கினர், அந்த நேரத்தில் ஐசக் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தொடரின் படப்பிடிப்பு சித்திரை 2021 இன் பிற்பகுதியில் தொடங்கப்பட்டது.

இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதி தொடராக 30 மார்ச் 2022 அன்று திரையிடப்பட்டது, மேலும் 4 மே அன்று ஆறு அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது. இந்தத் தொடர் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது, குறிப்பாக ஐசக் மற்றும் ஹாக்கின் செயல்திறன் மற்றும் முந்தைய மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடுகையில் வித்தியாசம் மற்றும் தனித்திறமை ஆகியவற்றிற்கு பாராட்டுகள் கிடைத்தன.

Remove ads

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads