மெக்சனா மாவட்டம்

குசராத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

மெக்சனா மாவட்டம்map
Remove ads

மெகசானா மாவட்டம் அல்லது மகிசானா மாவட்டம் (Mehsana district) or (Mahesana district) (குசராத்தி: મહેસાણા જિલ્લો) மேற்கிந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத் தலைமையகம் மெகசானா நகரம் ஆகும். 2011-இல் இம்மாவட்ட மக்கள் தொகை 2,027,727 ஆகும். பரப்பளவு 4484.10 சதுர கி. மீ., ஆகும். இது 600 கிராமங்களைக் கொண்டது. மோட்டார் வண்டி பதிவு எண் GJ-2. இம்மாவட்டத்தின் மொதெரா நகரத்தில் கலைநயமிக்க கட்டிட அமைப்புகளுடன் சூரியன் கோயில் மற்றும் படிக்கிணறு மற்றும் தரங்கா சமணர் கோயில் அமைந்துள்ளது.[1]. ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய தூத்சாகர் கூட்டுறவு பால் பண்னை இங்கு செயல்படுகிறது. மேலும் இம்மாவட்டத்தில் உலகின் பெரிய சர்தார் படேல் விளையாட்டரங்கம் உள்ளது.

விரைவான உண்மைகள் மெக்சனா, நாடு ...
Remove ads

அமைவிடம்

வடக்கே பனஸ்கந்தா மாவட்டம், மேற்கே பதான் மாவட்டம் மற்றும் சுரேந்திரநகர் மாவட்டம், தெற்கே காந்திநகர் மாவட்டம் மற்றும் அகமதாபாத் மாவட்டம், கிழக்கே சபர்கந்தா மாவட்டம் எல்லகைகளாக கொண்டது மகிசனா மாவட்டம்.

பார்க்கவேண்டிய இடங்கள்

முக்கிய நகரங்கள்

வரலாறு

பிந்தைய வரலாறு

இம்மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 1964இல் காந்திநகர் மாவட்டமும் பின் 2000இல் பதான் மாவட்டமும் உருவானது.

வருவாய் வட்டங்கள்

4484.10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் 10 வருவாய் வட்டங்களையும், 614 கிராமங்களையும் கொண்டது.[2]

  1. மெஹசானா
  2. கடி
  3. கேரலு
  4. வாத்நகர்
  5. விஜாபூர்
  6. விஸ்நகர்
  7. சட்லாசனா
  8. ஜோடானா
  9. உஞ்சா
  10. பெசராஜி

சட்டமன்ற தொகுதிகள்

இம்மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1. கேரலு. 2 உஞ்சா 3 விஸ்நகர். 4 பெஜரஜி. 5 கடி. 6 மெகசானா 7 விஜாபூர்

பொருளாதாரம்

வேளாண்மை

சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, காய்கறிகள் பயிரிடப்படுகிறது.

வணிகம்

மகிசனா மாவட்டத்தில், இந்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம், 1200 எண்ணெய் கிணறுகளும், 23 எரிவாயு கிணறுகளும் கொண்டுள்ளது. ஆசியாவின் இரணாவது பால் பண்ணை தொழிற்சாலையான தூத் சாகர் என்ற நிறுவனம் மகிசனா நகரத்தில் செயல்படுகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி மாவட்ட மக்கள் தொகை 2,027,727ஆக உள்ளது.[3] மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 462 நபர்கள் என்ற விகிதத்தில் உள்ளது. பாலினவிகிதம் 1000 வ்ஆண்களுக்கு 925 பெண்கள் என்ற அளவில் உள்ளது. எழுத்தறிவு 84.26% ஆக உள்ளது.

படக்காட்சியகம்

மெகசானா மாவட்டத்தில் அமைந்துள்ள சூரியன் கோயிலின் படங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads