மென்டே மக்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மென்டே மக்கள் என்போர், சியேரா லியோனியில் உள்ள மிகப் பெரிய இனக்குழு ஒன்றைச் சார்ந்தோர் ஆவர். இவர்களது மக்கள்தொகை சியேரா லியோனியின் மக்கள்தொகையின் 30%க்குச் சற்று அதிகம். இவர்களது அயல் இனக்குழுவான தெம்னே மக்கள் இவர்களிலும் சற்றுக் கூடிய மக்கள்தொகை கொண்டவர்கள். மென்டே மக்கள் நாட்டின் தெற்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் கூடுதலாக வாழ்கின்றனர். போ, கெனேமா, கைலாகுன், மோயம்பா ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் மென்டே மக்களைக் கொண்ட நகரங்கள்.

விரைவான உண்மைகள் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள், மொழி(கள்) ...

மென்டே மக்கள், மேற்காப்பிரிக்கா முழுவதிலும் பரந்து இருக்கும் பெரிய மக்கள் குழுவான மாண்டே மக்கள் குழுவைச் சேர்ந்தோராவர். மென்டேக்கள் பெரும்பாலும், வேளாண்மையையும், வேட்டையையும் தொழிலாகக் கொண்டுள்ளனர். உள்நாட்டுப் போரின் போது, மென்டே இனக்குழுவைச் சேர்ந்த அல்பா லெவாலியே என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட "குடிமக்கள் பாதுகாப்புப் படை" (Civil Defense Force) அரச படைகளுடன் சேர்ந்து போரிட்டது. இப்படையின் பிரிவுகளில் ஒன்றான மென்டே மக்களைக் கொண்ட காமசோர் படைப்பிரிவு பெரியதும், மிகப் பலம் பொருந்தியதுமான படைப்பிரிவாக விளங்கியது.[1]

மென்டேக்கள் இக்பா மென்டே (Kpa-Mende), கோலா மென்டே, சேவா மென்டே, வாய் மென்டே, கோ மென்டே ஆகிய பிரிவுகளாக உள்ளனர். இக்பா மென்டேக்கள் தெற்கே மோயம்பா மாவட்டத்தில் வாழ்கின்றனர். கோலா மென்டேக்கள், கெனேமா, புசேகுன் ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் உள்ள கோலா காட்டுப் பகுதியில் வாழ்கின்றனர். சேவா மென்டேக்கள் சேவா ஆற்றங்கரைப் பகுதிகளிலும், வாய் மென்டேக்கள் லைபீரியா, சியேரா லியோனியில் உள்ள புசேகுன் மாவட்டத்திலும் காணப்படுகின்றனர். கோ மென்டேக்கள் கைலாகுன் மாவட்டத்தில் உள்ளனர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads