மெர்சி வில்லியம்ஸ்

இந்திய அரசியல்வாதி மற்றும் கொச்சின் மேயர் From Wikipedia, the free encyclopedia

மெர்சி வில்லியம்ஸ்
Remove ads

மெர்சி வில்லியம்ஸ் ( மலையாளம் : മേഴ്സി വില്ല്യംസ്; 1947 - 19 நவம்பர் 2014), ஒரு ஆசிரியராக இருந்து அரசியல்வாதியாக மாறியவா் கேரள மாநிலத்திலுள்ள கொச்சி மாநகராட்சியின் 16 வது மேயரும், கொச்சியில் மேயர் பதவியை வகித்த முதல் பெண்மணியும் ஆவார். இடது ஜனநாயக முன்னணியின் உறுப்பினரான இவர், கொச்சி நகராட்சி கழக சபை உறுப்பினர்களிடையே நடந்த வெளிப்பைடயான வாக்கெடுப்பில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் வின்னி ஆபிரகாமை 47 க்கு 23 என்ற விகிதத்தில் வாக்குகளை பெற்று .வெற்றி பெற்றார். வில்லியம்ஸ் கொச்சி மாநகராட்சியின் 36 வது மண்டலத்தை (குன்னம்புரம்) பிரதிநிதித்துவப்படுத்தினார். [1][2][3]

விரைவான உண்மைகள் மெர்சி வில்லியம்ஸ், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை வரலாறு

கல்வி

மெர்சி புனித தெரசா கல்லூரியில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கேரளப் பல்கலைக்கழகத்தில் முதல்தர மாணவியாக சிறப்பிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.மேலும் கொச்சி நகரின் மறுமலர்ச்சி என்ற தலைப்பில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார்.[4]

ஆசிரியப் பணி

தான் பயின்ற அதே புனித தெரசா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கிய மொ்சி 2005 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் பொழுது சமூகவியல் துறையின் துறை தலைவராகவும் பணி புரிந்தார். டி. ஜே. வில்லியம்ஸ் என்பவைரத் திருமணம் செய்த மெர்சிக்கு அனூப் ஜோச்சிம் என்ற மகன் உள்ளார். தனது ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மெர்சி அதே வருடம் அரசியலில் நுழைந்தார்.[1][3][2]

அரசியல் வாழ்க்கை

கொச்சி மாநகராட்சியின் குண்ணும்புரம் மண்டலத்திலிருந்து மாநகராட்சி உறுப்பினராக சுயேச்சையாக போட்டியிட்டாலும் இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் ஆதரவில் வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றிகளுக்குப் பின்னர் மாநகராட்சியின் 16வது மேயராக மாநகராடசி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார். 48 வாக்குகள் ஆதரவாகவும் 23 வாக்குகள் எதிராகவும் பெற்ற மொ்சி 2005 முதல் 2010 வரை கொச்சி மாநகராட்சியின் முதல் குடிமகளாகப் பதவி வகித்தார்.[1][3][2] அவர் படித்த நகர சமூகவியல், நகரத் திட்டமிடல், மற்றும் ஆராய்ச்சி படிப்பு ஆகியன கொச்சி மாநகராட்சி மேயராக சிறப்பாகப் பணிபுரிய மொ்சிக்கு பேருதவி புரிந்தன.

அவர், மேயராக இருந்த காலத்தில், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் (JNNURM) கீழ் திட்டங்கள் குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய அனைத்து கூட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளார். [3] மேயராக அவர் தனது பணிகளை திறமையாகச் செய்தார், மேலும் அவர் பொறுப்பேற்றபோது குப்பைத் தொட்டிகளுக்கு பெயர் பெற்ற நகரம் என்ற பெயரை பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் இந்தியாவின் தூய்மையான நகரமாக அறிவிக்கப்பட்டு விருது பெற காரணமானார். கேரளாவில் முதன்முதலில் நகரத்தின் கழிவு மேலாண்மை அமைப்புக்கான உப சட்டங்களை அவர் இயற்றினார். கொச்சி நகரத்திற்கான ஒரு பரவலாக்கப்பட்ட கழிவுப் பிரிப்பு (ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு வாளிகளை வழங்குவதன் மூலம்) முறையை அவர் நடைமுறைப்படுத்தினார். அவரது விடாமுயற்சியான அணுகுமுறையால், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் (ஜே.என்.என்.ஆர்.எம்.) ஆகியவற்றின் நிதி உட்பட நகர அபிவிருத்திக்காக ரூ .900 கோடி அளவுக்கு அவரால் நிதி திரட்ட முடிந்தது.

Remove ads

இறப்பு

மொ்சி 2014 ஆம் ஆண்டு தனது 67 வது வயதில் புற்றுநோயின் காரணமாக மரணமைடந்தார். 20 நவம்பர் 2014 அன்று பலரிவட்டமில் உள்ள புனித ஜான் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.[5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads