மெர்டேக்கா அரங்கம்

மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் உள்ள விளையாட்டரங்கம் From Wikipedia, the free encyclopedia

மெர்டேக்கா அரங்கம்
Remove ads

மெர்டேக்கா அரங்கம் அல்லது மலேசிய மெர்டேக்கா அரங்கம் (மலாய்; Stadium Merdeka அல்லது Stadium Merdeka Malaysia; ஆங்கிலம்: Independence Stadium Malaysia; சீனம்: 默迪卡體育場) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஒரு விளையாட்டரங்கம்; மற்றும் மலேசிய வரலாற்றில் தடம் பதித்த ஒரு புகழ்பெற்ற வரலாற்றுத் தளமும் ஆகும்.

விரைவான உண்மைகள் முகவரி, பொது போக்குவரத்து ...

மலாயா விடுதலை தினமான 31 ஆகத்து 1957-ஆம் தேதி தொடங்கி, இந்த அரங்கம் மலாயா கூட்டமைப்பின் விடுதலைப் பிரகடனத்தின் வரலாற்றுத் தளமாக அறியப்படுகிறது. அதே வேளையில் இந்த அரங்கம், 16 செப்டம்பர் 1963 அன்று மலேசியா கூட்டமைப்பு பிரகடனம் செய்யப்பட்ட போதும் இந்த அரங்கமே பயன்படுத்தப்பட்டது.

இந்த அரங்கம் கோலாலம்பூர் மாநகர மையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில், கோலாலம்பூர் நெகாரா அரங்கம் (Stadium Negara Kuala Lumpur) மற்றும் மெர்டேக்கா 118 கட்டிடம் (Merdeka 118); ஆகிய தளங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.

Remove ads

பின்னணி

இந்த அரங்கத்தின் கட்டுமானச் செலவு RM 2.3 மில்லியன்; மேலும் கீழ் மேல் மாடிகளுடன் அமைக்கப்பட்ட இந்த அரங்கம் 25,000 இருக்கைகளைக் கொண்டது. அத்துடன் 14 சுரங்க நுழைவாயில்கள் (Tunnels Entrance), ஒரு மூடிய வெளி, 50 பல்லடுக்குகள் (Turnstiles); மற்றும் 4 ஒளிவெள்ளக் கோபுரங்களைக் கொண்டுள்ளது.[2]

மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமானின் வழிகாட்டுதலில், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் இஸ்டான்லி ஜூக்ஸ் (Stanley Jewkes) என்பவரால் இந்த அரங்கம் வடிவமைக்கப்பட்டது.

இந்த அரங்கம் கட்டி முடிக்கப்பட்டதும் சில சாதனைகளையும் படைத்தது. மிக உயரமான ஒளிவெள்ளக் கோபுரங்கள் (Floodlight Towers); மிகப்பெரிய வளைவுத் தூண் கூரைகளுக்கான (Thin-shell Structure) பன்னாட்டுச் சாதனை; தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அரங்கம் எனும் சாதனைகளைப் படைத்தது.[2]

Remove ads

பொது

Thumb
கோலாலம்பூர் மாநகர் மையத்தில் மெர்டேக்கா அரங்கம்

1998-ஆம் ஆண்டு 16-ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம் கட்டப்படும் வரை, கோலாலம்பூரின் தேசியநிலைக் கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு இந்த அரங்கம் முக்கிய இடமாக இருந்தது. அதற்கு முன்னர், இந்த அரங்கம் மலேசிய தேசிய கால்பந்து அணியின் சொந்த அரங்கமாக இருந்தது.

இந்த அரங்கம் 1995-ஆம் ஆண்டு வரை மெர்டேக்கா போட்டிகளுக்கான இடமாகவும் இருந்தது. அத்துடன், கோலாலம்பூரில் நடைபெற்ற ஐந்து தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று போட்டிகள் இந்த அரங்கத்தில்தான் நடத்தப்பட்டன.

யுனெசுகோவின் ஆசிய-பசிபிக் விருது

1975-ஆம் ஆண்டில், பாகிஸ்தான் மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையிலான உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்ட இறுதிப் போட்டியும் இந்த அரங்கத்தில்தான் நடைபெற்றது.

இந்த அரஙம் தற்போது தேசிய பாரம்பரியக் கட்டிடமாக உள்ளது. 2008-ஆம் ஆண்டில், அதன் பண்பாட்டு முக்கியத்துவம் மற்றும் உருவகத்தின் காரணமாக, பாரம்பரியப் பாதுகாப்பிற்கான சிறந்த யுனெஸ்கோவின் ஆசிய-பசிபிக் விருதைப் (UNESCO Asia-Pacific Award for Excellence for Heritage Conservation) பெற்றது.[3]

Remove ads

காட்சியகம்

மலேசிய மெர்டேக்கா அரங்கத்தின் காட்சிப் படங்கள்:

மேற்கோள்கள்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads