தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள்
தென்கிழக்கு ஆசியாவின் தற்போதைய 11 நாடுகளை உள்ளடக்கிய ஒரு விளையாட்டு நிகழ்வு. From Wikipedia, the free encyclopedia
Remove ads
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள், (மலாய்: Sukan Asia Tenggara; ஆங்கிலம்: Southeast Asian Games) என்பது தென்கிழக்கு ஆசியாவின் தற்போதைய 11 நாடுகளை உள்ளடக்கிய ஒரு விளையாட்டு நிகழ்வு. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
இந்தத் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளைச் சுருக்கமாக ‘சி’ விளையாட்டுகள் (SEA Games) என்று அழைக்கிறார்கள்.
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் நிகழ்வு, தென்கிழக்கு ஆசிய விளையாட்டு சம்மேளனத்தின் (Southeast Asian Games Federation) கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அதே வேளையில் அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் (IOC - International Olympic Committee) மற்றும் ஆசிய ஒலிம்பிக் மன்றம் (Olympic Council of Asia - OCA) ஆகியவற்றின் மேற்பார்வையிலும் உள்ளது.
ஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் ஐந்து துணைப் பிராந்திய விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாக தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் விளங்குகிறது. மற்றவை:
- மத்திய ஆசிய விளையாட்டு (Central Asian Games)
- கிழக்கு ஆசிய இளைஞர் விளையாட்டு (East Asian Youth Games)
- தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (South Asian Games)
- மேற்கு ஆசிய விளையாட்டு (West Asian Games)[1]
Remove ads
வரலாறு
இந்த தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் போட்டி தொடங்கிய காலத்தில தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள் (South East Asian Peninsular Games) அல்லது சியாப் விளையாட்டுகள் (SEAP Games) எனும் பெயரில் தொடங்கப்பட்டன.
1958 மே 22-ஆம் தேதி, ஜப்பான், தோக்கியோ நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அந்தப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் ஒரு விளையாட்டு அமைப்பை நிறுவுவதற்கு ஒப்புக் கொண்டனர்.
தொடக்கக் கால உறுப்பிய நாடுகள்
பர்மா (இப்போது மியான்மர்), கம்பூசியா (இப்போது கம்போடியா), லாவோஸ், மலாயா (இப்போது மலேசியா), தாய்லாந்து மற்றும் வியட்நாம் குடியரசு (தென் வியட்நாம்) ஆகியவை உறுப்பிய நாடுகளாக இருந்தன.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையாட்டுகளை நடத்துவதற்கு 1959 ஜூன் மாதம் அந்த உறுப்பிய நாடுகள் ஒப்புக் கொண்டன.
முதல் சியாப் விளையாட்டுப் போட்டி
ஆறு நாடுகளைச் சேர்ந்த 527-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள்; விளையாட்டு அதிகாரிகளுடன் முதல் சியாப் விளையாட்டுப் போட்டி 1959 டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரையில் பாங்காக் நகரில் நடைபெற்றது.
பர்மா (இப்போது மியான்மர்), லாவோஸ், மலாயா, சிங்கப்பூர், தெற்கு வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய 12 நாடுகள் பங்கேற்றன.
1975-ஆம் ஆண்டு 8-ஆவது சியாப் விளையாட்டுப் போட்டிகளில், புரூணை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ப்பதற்கு சியாப் கூட்டமைப்பு பரிசீலித்தது.
தென்கிழக்கு ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு
அந்த நாடுகள் முறைப்படி 1977-ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டன. அதே ஆண்டு சியாப் கூட்டமைப்பு தென்கிழக்கு ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதுவே தற்சமயம் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் என்று அழைக்கப் படுகின்றன.
2003-ஆம் ஆண்டு ஹனோய் - ஹோ சி மின் நகரில் நடைபெற்ற 22-ஆவது தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது கிழக்கு திமோர், அனுமதிக்கப்பட்டது.
Remove ads
தேசிய ஒலிம்பிக் குழுக்கள்
தென்கிழக்கு ஆசிய தீபகற்ப விளையாட்டுகள்
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள்
- 1 பிலிப்பைன்ஸ்; இந்தோனேசியா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற பின்னர் மறுபெயரிடப்பட்டது.
- 2 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் வரலாற்றில் ஒரு தலைநகரம் அல்லாத நகரத்தில் விளையாட்டுகளை நடத்துவது இதுவே முதல் முறை.
- 3 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளின் வரலாற்றில் ஹனோய் மற்றும் ஹோ சி மின் நகரம் ஆகிய இரண்டு நகரங்களில் விளையாட்டு அரங்குகள் அமைவது இதுவே முதல் முறை.
- 4 பிலிப்பைன்ஸ் நாட்டின் பல நகரங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன
- 5 சோன்புரி மற்றும் பாங்காக் நகரங்கள் 24-ஆவது விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களில் அடங்கும்.
- 6 பலெம்பாங் விளையாட்டுகளின் முதன்மையாளர்; ஜகார்த்தா இணையாளர்.
Remove ads
பதக்க அட்டவணை
ஆசிய ஒலிம்பிக் மன்றம் மற்றும் முந்தைய தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் பதக்க அட்டவணைகளை வைத்து இருந்த பிற காப்பகத் தளங்களின் தரவுகளைச் சமநிலைப் படுத்திய பிறகு இந்த அட்டவணை சரி செய்யப்பட்டது. மேற்கூறிய தளங்களில் இருந்து சில தகவல்கள் விடுபட்டு உள்ளன அல்லது புதுப்பிக்கப் படவில்லை.[3][4][5][6][7][8]
- ^[1] - 2017 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளின் போது ஊக்கமருந்து வழக்குகள் காரணமாகச் சில பதக்கங்களின் எண்ணிக்கை, இந்தப் பதக்க அட்டவணையில் சேர்க்கப்படவில்லை
- ^[2] – 1961 வரை மலாயா எனும் பெயரில் போட்டியிடப்பட்டது.
- ^[3] – வியட்நாம் குடியரசு ஜூலை 1976-இல் கலைக்கப்பட்டது. வடக்கு வியட்நாம்; தென் வியட்நாமுடன் இணைந்தது. எனவே, இந்த நாட்டிற்கான பதக்கங்களின் எண்ணிக்கை 1975 வரை காட்டப்படுகிறது. தெற்கு வியட்நாம் வென்ற பதக்கங்கள் ஏற்கனவே இங்கு இணைக்கப்பட்டு உள்ளன.
- ^[4] – 1987 வரை பர்மா எனும் பெயரில் போட்டியிட்டது.
- ^[5] – கம்பூச்சியா மற்றும் கெமர் குடியரசு எனும் பெயரில் போட்டியிட்டது.
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads