மேசகல்யாணி
கருநாடக இசையின் 65வது மேளகர்த்தா இராகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேச கல்யாணி (அல்லது கல்யாணி) கருநாடக இசையின் 65வது மேளகர்த்தா இராகம். எப்பொழுதும் பாடக் கூடிய இவ்விராகத்திற்கு மாலைப் பொழுது மிகவும் பொருத்தமானதாகும். நல்ல எடுப்பான இராகம் ஆகையால், நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடக் கூடிய இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு சாந்த கல்யாணி என்று பெயர்.இந்துஸ்தானி இசையில் இவ்விராகத்திற்கு யமன் தாட் என்று பெயர்.[1][2][3]
இலக்கணம்

ஆரோகணம்: | ஸ ரி2 க3 ம2 ப த2 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த2 ப ம2 க3 ரி2 ஸ |
- ருத்ர என்றழைக்கப்படும் 11வது சக்கரத்தில் 5 வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
- பிரதி மத்திம இராகங்களில் மிகச் சிறந்த இவ்விராகம், விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.
- ஸ்புரித, திரிபுச்ச கமகங்கள் இவ்விராகத்தின் சாயலைக் காட்டும்.
- இராகம்-தானம்-பல்லவிக்கு ஏற்ற இராகம்.
- எல்லா விதமான இசை வகைகளும் இவ்விராகத்தில் இயற்றப்பட்டுள்ளன.
- பண்டைய மேளமாகிய ஷட்ஜக் கிராமத்தின் காந்தார மூர்ச்சனை கல்யாணி.
- 29வது மேளமாகிய சங்கராபரணத்தின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
- மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரிஷப, காந்தார, பஞ்சம, தைவத, நிஷாத மூர்ச்சனைகள் முறையே ஹரிகாம்போஜி (28), நடபைரவி (20), சங்கராபரணம் (29), கரகரப்பிரியா (22), தோடி (08) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.
- ஹங்கேரி நாட்டு இசையிலும் இந்த இராகம் காணப்படுகிறது.
Remove ads
உருப்படிகள்
- வர்ணம்: வனஜாக்ஷிரோ - ஆதி - ....
- கிருதி : ஹிமாத்ரி ஸூதே - ரூபகம் - சியாமா சாஸ்திரிகள்.
- கிருதி : பதம் தருவாய் - ஆதி - டைகர் வரதாச்சாரியார்.
- கிருதி : நிதிசால சுகமா - மிஸ்ர சாபு - தியாகராஜர்.
- தரு : வாசுதேவயனி - ஆதி - தியாகராஜர்.
- கிருதி : ஆடினதெப்படியோ - ஆதி - முத்துத் தாண்டவர்.
- கிருதி : சிதம்பரம் என - ஆதி - பாபநாசம் சிவன்
- பதம் : பாரெங்கும் - ஆதி - கனம் கிருஷ்ணய்யர்
- கிருதி : தேவி மீனாக்ஷி முதம் - ரூபகம் - தச்சூர் சிங்காரச்சாரியார்
- கிருதி : ஸரஸ்வதி நன்னெபுடு - ரூபகம் - திருவெற்றியூர் தியாகய்யர்
ஜன்ய இராகங்கள்
மேசகல்யாணியின் ஜன்ய இராகங்கள் இவை.
- சாரங்கா
- அமிர்தவர்ஷிணி
- யமுனாகல்யாணி
- ஹமீர் கல்யாணி
- ரசமஞ்சரி
- மோகனகல்யாணி
- குந்தலசிறீகண்டி
- குந்தலகுசுமாவளி
- சதுரங்கணி
- கௌரிநிஷாதம்
- சுநாதவினோதினி
- மைத்திரபாவனி
- கௌமோத
- கல்யாணதாஹினி
- வந்தனதாரினி
- சுப்ரவர்ணி
- ஸ்மரரஸாளி
- கமலோத்ரம்
திரையிசைப் பாடல்கள்
மேசகல்யாணி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்
- சிந்தனை செய் மனமே - அம்பிகாபதி.
- வந்தாள் மகாலக்ஷ்மியே - உயர்ந்த உள்ளம்.
- மலையோரம் மயிலே விளையாடும் குயிலே - ஒருவர் வாழும் ஆலயம்.
- வெள்ளைப்புறாவொன்று - புதுக்கவிதை.
- இனியகானம் - பாட்டுப்பாடவா.
- மன்னவன் வந்தானடி தோழி - திருவருட்செல்வர்.
- அம்மா என்றழைக்காத உயிர் - மன்னன்.
- நிற்பதுவே நடப்பதுவே - பாரதி.
- ஜனனி ஜனனி - தாய் மூகாம்பிகை (1982).
- நதியில் ஆடும் பூ - வானம்.
- நான் பாட வருவாய் - உதிரிப் பூக்கள் 1979.
- காற்றில் வரும் கீதமே - ஒரு நாள் ஒரு கனவு (2005).
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads