நடபைரவி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நடபைரவி கருநாடக இசையின் 20 ஆவது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 20 ஆவது இராகத்தின் பெயர் நாரீரீதிகௌள. இந்துஸ்தானி இராகத்தில் இதற்கு ஈடானது அசாவேரி தாட் ஆகும்.
இலக்கணம்

ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம1 ப த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம1 க2 ரி2 ஸ |
சிறப்பு அம்சங்கள்
- இதன் க, ம, ப, த, நி முறையே கிரக பேதத்தின் வழியாக சங்கராபரணம் (29), கரகரப்பிரியா (22), தோடி (08), மேசகல்யாணி (65), ஹரிகாம்போஜி (28) ஆகிய மேளங்களைக் கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் சண்முகப்பிரியா (56) ஆகும்.
- இதன் காந்தாரத்தை அந்தர காந்தாரமாக மாற்றினால் இராகம் சாருகேசி (26) ஆகும்.
- ஐரோப்பிய இசையிலும், கிரேக்க இசையிலும் இதற்கு ஈடான இசை அமைப்பு இருப்பதாக அறியவருகிறது.
- இந்த இராகம் மேலைத்தேய இசையின் Natural Minor Scale இற்கு இணையானது.
Remove ads
உருப்படிகள்[1]
ஜன்ய இராகங்கள்
நடபைரவியின் ஜன்ய இராகங்கள் இவை.
Remove ads
திரையிசைப் பாடல்கள்
நடபைரவி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:
- அம்மாவும் நீயே அப்பாவும் நீயே :- களத்தூர் கண்ணம்மா
- திருக்கோயில் வாசலில் :- முத்து
- வசீகரா :- மின்னலே
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads