மேதில் தேவிகா
இந்திய நடனக் கலைஞர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேதில் தேவிகா (Methil Devika) என்பவர் ஒரு இந்திய நடன ஆராய்ச்சி அறிஞர், கல்வியாளர், கலைஞர் மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த நடன இயக்குநர் ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
மேதில் தேவிகா 1976 இல் துபாயில் பிறந்தார். அங்கு இவர் இந்திய உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.[1] இவருக்கு ராதிகா பிள்ளை மற்றும் மேதில் ரேணுகா என்ற இரண்டு அக்காள்கள் உள்ளனர். எழுத்தாளர் மேதில் ராதாகிருஷ்ணன் இவரது தாய்மாமன், மற்றும் எழுத்தாளர் வி. கே. எனின் மனைவியான வேதவதி இவரது தாய்வழி அத்தை ஆவார். மெர்சி கல்லூரிக்குச் சென்றபின், பாலக்காட்டில் உள்ள அரசு விக்டோரியா கல்லூரியில் வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
Remove ads
கல்வி
மேலும் இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மைப் பட்டத்தில் முதல் தரவரிசையும்,[2] ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் நிகழ்த்து கலைகளில் முதுகலை பட்டத்தை முதல் தரவரிசையோடு தங்கப் பதக்கக்கம் பெற்று முடித்தார்.[3] 2013 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மோகினியாட்டத்தில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பைபை முடித்தார். இவர் கேரள கலாமண்டலம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் துறையிலும் முதுகலை படிப்புத் துறையில் ( மோகினியாட்டம் / கதகளி / கூடியாட்டம் ) [4] விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.[5] கேரள கலாமண்டலம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்கள் துறையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[6]
Remove ads
தொழில்
மேதில் தேவிகா ஒரு கல்வியாளர், அறிஞர், கேரள பாரம்பரிய நடன வடிவமான மோகினியாட்டத்தின் ஆதரவாளர் ஆவார். அமெரிக்கா, ஐரோப்பா, ஆத்திரேலியா, சிங்கப்பூரின் எஸ்ப்ளானடே அரங்கு மற்றும் கேரள கவின் கலை சங்கம் மற்றும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் இளைஞர் விழா [7] போன்ற முக்கிய விழாக்களில் இவரது நடனநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு பள்ளிகள் மற்றும் நிறுவனங்களிலும் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் சொற்பொழிவு-செயல் விளக்கம் மற்றும் கட்டுரை சமர்பித்தல் போன்றவற்றை தேவிகா வழக்கியுள்ளார். தேவிகா தனது கலை மூலமாக மோகினியாட்டம் மற்றும் மலையாள இலக்கியம், இசை, கவிதைகளை வெளிநாடுகளில் பரப்பியுள்ளார். திருவனந்தபுரத்தில் 2017 ஆம் ஆண்டு ஐந்து நாள் நடந்த சிலாங்க நடன விழா போன்ற விழாக்களை இவர் தொகுத்தளித்துள்ளார்.
நாகா நாடகத்தின் 2015 ஆம் ஆண்டய அரங்க தழுவலில் தனது கணவர் முகேஷ் [8] மற்றும் இவரது சகோதரி சந்தியா ராஜேந்தன் ஆகியோருடன் தோன்றினார். இதை சுவீரன் இயக்கியுள்ளார்.[9] பின்னர் 2017 ஆம் ஆண்டில் சுமேஷ் லால் இயக்கிய ஹ்யூமன்ஸ் ஆஃப் சம்வொன் திரைப்படத்தில் அறிமுகமானார்.[10]
2018 ஆம் ஆண்டில், 11 ஆம் நூற்றாண்டு கவிஞரின் படைப்பு குறித்த இவரது விளக்கத்தின் அடிப்படையில், சர்பதத்வம் என்ற குறும் ஆவணப்படத்தில் இவர் தோன்றி விளக்கத்தை வழங்கினார் . இதில் இடம்பெற்ற பாடல் வரிகளுக்கு இசை அமைத்தார், நடனம் அமைத்து, நடனமாடினார். மேலும் இதன் இணை இயக்குனராகவும் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.[11]
தனிப்பட்ட வாழ்க்கை
தேவிகா 2002 இல் ராஜீவ் நாயரை மணந்து பெங்களூரில் குடியேறினார் [1] அங்கு இவர்களுக்கு தேவாங் என்ற மகன் பிறந்தார்.[12] தேவாங் பிறந்த உடனேயே விவாகரத்து பெற்ற தேவிகா பாலக்காடுக்கு இடம் பெயர்ந்தார். மேலும் பாலக்காட்டின் ராமநாதபுரத்தில் "ஸ்ரீபாத நாத்ய கலரி" என்ற ஒரு நடனப் பள்ளியைத் திறந்தார்.
பிரபல மலையாள நடிகரான முகேஷை 2013 அக்டோபர் 24 அன்று திருமணம் செய்து கொண்டார்.[5] இது இவரது இரண்டாவது திருமணமும் கூட.[13]
Remove ads
விருதுகள்
2010 ஆம் ஆண்டு மோகினியாட்டத்திற்காக [14] மாநில விருதான கேரள சங்கீத நடக அகாதமி விருதையும், 2007 ஆம் ஆண்டு கேந்திர சங்க நாடக அகாதமியால் நிறுவப்பட்ட தேசிய விருதான உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ விருதையும் பெற்றார்.[15][16] 2010 இல் ஒடிசா அரசாங்கத்திடமிருந்து தேவதாசி தேசிய விருதையும் பெற்றார்.[17] . நடனக் கோட்பாடுகளில் தேர்ச்சி மற்றும் பயிற்சி பெற்றதற்காக மேற்கு வங்கத்திடம் நிரோட் பரன் விருதைப் பெற்றார்.[6] தேவிகா தூர்தர்ஷனில் ஒரு 'அ' தரச்சான்று பெற்ற கலைஞர் ஆவார். 2016 ஆம் ஆண்டின் மத்தியில் சென்னை இசை அகாதமியில் சிறந்த நடன கலைஞர் என்ற விருதைப் பெற்றார்.[18]
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads