மேற்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேற்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம் (Western Coalfields Limited (WCL) 1975ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், இந்திய அரசின் நிலக்கரித் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மகா நவரத்தின மதிப்பு பெற்ற நிறுவனமான கோல் இந்தியாவின் எட்டு துணை நிறுவனங்களில் ஒன்றாகும்.
15 மார்ச் 2007ல் சிறு நவரத்தின மதிப்பு பெற்றது. இதன் தலைமை அலுவலகம் மகாராட்டிரா மாநிலத்தின் நாக்பூரில் உள்ளது.
2014 - 15ம் ஆண்டில், நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில், இந்நிறுவனம் 6.7% நிலக்கரியை உற்பத்தி செய்தது.
இந்நிறுவனம் மகாராட்டிரா மாநிலத்தின் நாக்பூர் மாவட்டம், யவத்மாள் மாவட்டம், சந்திரபூர் மாவட்டம் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் பேதுல் மாவட்டம் மற்றும் சிந்த்வாரா மாவட்டங்களில் நிலக்கரிச் சுரங்கங்களைக் கொண்டுள்ளது.
மேற்கு இந்தியாவின் மின் உற்பத்தி நிலையங்கள், சிமெண்ட் ஆலைகள், இரும்பாலைகள், உரத் தொழிற்சாலைகள், வேதியல் தொழிற்சாலைகள் மற்றும் அனல் மின் நிறுவனங்களுக்கு தேவையான நிலக்கரியை இந்நிறுவனம் வழங்குகிறது.[1]
2014 -2015ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த நிலக்கரி உற்பத்தி 41.15 மில்லியன் மெட்ரிக் டன் ஆகும். [2]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads