மேற்கு விரைவு நெடுஞ்சாலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேற்கு விரைவு நெடுஞ்சாலை (Western Express Highway, சுருக்கமாக: WEH)[2] இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தின் மீரா ரோட்டிலிருந்து துவங்கி வடக்கே பாந்திரா-வொர்லி கடற்பாலம் வரை நீளும் 25.33 கிலோ மீட்டர் நீளம் கொண்ட விரைவுச் சாலையாகும். இந்த விரைவு நெடுஞ்சாலை மொத்தம் 8 முதல் 10 வரையிலான வழித்தடங்கள் கொண்டது.[3] இச்சாலை மும்பை புறநகர் மாவட்டத்தின் மீரா ரோட்டிலிருந்து துவங்கி விரிவாக்கம் அடைந்து, வடக்கே பாந்திரா-வொர்லி கடற்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலை 48-இல் இணைகிறது. இச்சாலை மும்பையின் புறநகர் பகுதிகளுக்கும், சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கும் விரைவான போக்குவரத்திற்கு உதவியாக உள்ளது.

Remove ads
சந்திப்புச் சாலைகள்
மேற்கு விரைவு நெடுஞ்சாலையுடன் கோரேகாவில் வீர சாவர்க்கர் சாலை மற்றும் ஜெனரல் ஏ. கே. வைத்தியா மார்க், ஜோகேஸ்வரி-விக்ரோளி இணைப்புச் சாலை, சாந்த குருஸ்-செம்பூர் இணைப்புச் சாலை, அந்தேரி-குர்லா சாலை, அந்தேரியில் சாகர் சாலை, வில்லே பார்லேயில் சாகர் உயர்த்தப்பட்ட அணுகல் சாலை மற்றும் பாந்த்ராவில் சுவாமி விவேகாநந்தா சாலைகளும் இணைகிறது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads