மேலப்பாளையம்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மேலப்பாளையம் (ஆங்கிலம்: Melapalayam; Arbic : ميلابالايام) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இவ்வூர் கீழவீரராகவபுரம் என்று முன் காலத்தில் அழைக்கப்பட்டு வந்தது, மேலப்பாளையம் எனும் இந்தப் பகுதி திருநெல்வேலி மாநகராட்சியாக உருவாக்கப்படுவதற்கு முன்பாக தனி நகராட்சியாகச் செயல்பட்டு வந்தது. இப்பகுதி பாளையங்கோட்டை பகுதியின் மேற்கில் அமைந்திருப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது.

இந்த பகுதியின் வடக்கு திசையில் திருநெல்வேலி சந்திப்பும் (சுமார் 5கி.மி), கிழக்கில் பாளையங்கோட்டையும் (சுமார் 4கி.மி) வடமேற்கில் நெல்லை நகரம் (சுமார் 5 கி.மி) பகுதியும் அமைந்துள்ளது. பாளையங்கோட்டை பாபநாசம் சாலை இவ்வூரின் வழியாகத்தான் கடந்து செல்கிறது. கன்னியாகுமரி நெல்லை பைபாஸ் சாலை இப்பகுதியை தொட்டுத்தான் செல்கிறது, மேலும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையமும் (சுமார் 1.5 கி.மீ. ல்) இப்பகுதியில்தான் அமைந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலேயே மக்கள் தொகை அதிகமும் நெருக்கமும் உள்ள ஊர் மேலப்பாளையம். இங்கே தலைமுறை தலைமுறையாயக நெசவுத் தொழில் இருந்து வந்தது. ஆனால் பிற்காலத்தில் சுமார் 40 வருடங்களுக்கு முன் நெசவுத் தொழில் நலிவடைந்து தற்போதுவரை பிரதானமான தொழிலாக பீடி சுற்றுதல் இருந்து வருகிறது. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் மிக முக்கியமான பீடி தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் இங்கேதான் அமைந்துள்ளன. பெண்கள் வீட்டில் அமர்ந்தபடியே பீடி சுற்றும் தொழிலை மேற்கொள்கிறார்கள். இப்போது பீடித்தொழில் நசிந்து வருகிறது.

இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் நத்தம் பகுதியில் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஓடுகிறது. மக்களின் தாகத்தை தீர்த்து வைக்கிறது. அஃதன்றி பாளையங்கால்வாய் என்ற பெயர் கொண்ட வாய்க்காலும் மேலப்பாளையத்தை சுற்றிலும் பிறை வடிவத்தில் விவசாய நீர்த்தேவைக்கும் வடிகாலாக அமைந்துள்ளது.

Remove ads

தெருக்களின் பட்டியல்

மேலப்பாளையத்தில் கீழாப்பாளையம், மேத்தமார் பாளையம், பிறை நகர், பஜார், கொடிமரம், வாய்க்கால் பாலம், நத்தம், குறிச்சி, கொட்டிக் குளம், கணேச புரம், பரக்கத் நகர், பெஸ்ட் நகர், டி.நகர், அம்பிகா புரம், கருங்குளம், முன்னீர் பள்ளம், பீடிக்கம்பெனி காலனி, ஹாமீம்புரம், சந்தை, ரோஸ் நகர், தாய்நகர், ராஜா நகர், ஹக் காலனி, ஹாஜிரா நகர், கரீம்நகர், அமுதா பீட் நகர், நேரு நகர், சித்தீக் நகர், ஞானியாரப்பா நகர், பங்களாப்பா நகர், ரகுமானியாபுரம், வசந்தா புரம், வீரமாணிக்கபுரம், குலவணிகர்புரம், சேவியர்ஸ் காலனி, வேடுவர் காலனி போன்ற பகுதிகள் அமைந்துள்ளது. இங்கே ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் அமைந்துள்ளது. மேலும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் மேலப்பாளையம் எல்கைக்கு உட்பட்டதாகும்.

இங்கு கீழாப்பாளையம் எனும் பகுதியில் அரசினர் மருத்துவமனையும், பெரிய தபால் நிலையமும் அமைந்துள்ளது. கொட்டிகுளம் எனும் பகுதியில் நூலகம் அமைந்துள்ளது, சந்தையிலிருந்து நெல்லை சந்திப்புக்கு போகும் நேதாஜி சாலையில் மேலப்பாளையம் முனிசிபல் ஆபிஸ் அமைந்துள்ளது. அதே சாலையில் மின்சார வாரிய அலுவலகமும், முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியும் அமைந்துள்ளது. முனிசிபல் ஆபிஸின் நேர் எதிரில் உழவர் சந்தை உள்ளது. அதற்கு தெற்கே பஜார் செல்லும் நேருஜி ரோட்டில் காவல் நிலையம் அமைந்துள்ளது. அதனை ஒட்டியே மாநகராட்சி திருமண மண்டபமும், அதற்கு கிழக்கே மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி(TNTJ) வாசல் அமைந்துள்ளது. சந்தை எனும் பகுதியில் இரண்டு மேல் நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் அமைந்துள்ளன. கீழாப்பாளையம் பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. ஹாமீம் புரம் பகுதியில் ரஹ்மானிய்யா மேல்நிலைப் பள்ளியும், அதற்கப்பால் மின்சார வாரிய அலுவலத்திற்கு தெற்கே அன்னை ஹாஜிரா பெண்கள் கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. மேலப்பாளையம் வாய்க்கால் பாலம் எனும் பகுதியில் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.

Remove ads

மருத்துவமனைகள் பட்டியல்

  • அரசு மருத்துவமனை (மகப்பேறு மருத்துவர்)
  • அல் ஹிஜாமா கிளினிக் ( cupping therapy clinic )
  • பயோலைன் இரத்த பரிசோதனை நிலையம் (LAB ASRAF) சந்தை
  • செல்வன் மருத்துவமனை (மகப்பேறு மருத்துவர்)
  • ஜெயக்குமார் மருத்துவமனை
  • இரத்தினசாமி மருத்துவமனை
  • விஜயா மருத்துவமனை
  • நிஜாம் மருத்துவமனை
  • பவுல் மருத்துவமனை
  • நூர் மருத்துவமனை
  • மீரான் மையம்
  • சார்லி பல் மருத்துவமனை (பல் மருத்துவமனை)
  • ஜே.கே. மருத்துவமனை (மகப்பேறு மருத்துவர்)
  • ரஹ்மான் மையம் (சுவாச மையம்)
  • புன்னகை பல் மருத்துவமனை (பல் மருத்துவமனை)
  • மஜித் பல் மருத்துவமனை
  • ஜூட் மருத்துவமனை
  • குறிச்சி புதிய பிறை மருத்துவமனை
  • அல்-நூர் மருத்துவமனை (சிறந்த குழந்தை சுகாதாரம்)
  • நசீஹா டிரஸ்ட் மருத்துவமனை
  • மனிதம் டிரஸ்ட் மருத்துவமனை
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads