மைக்ரோசாப்ட் எக்செல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் சுருக்கமாக அறியப்படும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் எக்ஸ்செல் மைக்ரோசாப்ட்டினால் உருவாக்கப்பட்டு விண்டோஸ் கணினிகளுக்காகவும் ஆப்பிள் மாக்கிண்டோஷ் கணினிகளுக்காகவும் விருத்தி செய்யப்பட்டது. இது அலுவலகப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஓர் மைக்ரோசாப்ட் ஆபிஸ் விரிதாள் மென்பொருளாகும். இதன் பிரதான வசதிகளாவன வெளிப்படையான இலகுவான இடைமுகம் வினைத்திறனாக கணித்தல்களை மேற்கொள்ளல், வரைபடங்களை உருவாக்குதல். இதன் தொடர்ச்சியான சந்தைப் படுத்தும் முயற்சிகள் இன்றுவரை பிரபலான மைக்ரோசாப்ட் மென்பொருளாக விளங்கவைத்தது. 1993 இல் லோட்டஸ் சாப்ட்வேர் (இன்றைய ஐபிஎம் இன் ஓர் பகுதி) இன் லோட்டஸ் 1-2-3 மென்பொருளை மைக்ரோசாப்ட்டு ஆபிஸ் மென்பொருளோடு எக்செல் மென்பொருளைச் சேர்த்துச் சந்தைப் படுத்தி வெற்றிகொண்டனர்.
Remove ads
வரலாறு
ஆரம்பத்தில் 1982 இல் CP/M இயங்குதளங்களில் மல்டிபிளான் என்ற விரிதாள் மென்பொருள் தயாரிக்கப்ட்டது டாஸ் இயங்குதளங்களில் லோட்டஸ் 1-2-3 இன் கடுமையான போட்டிகாரணமாக இது பிரபலம் அடையவில்லை. 1985 இல் விண்டோஸ் இயங்குதளத்திற்கான எக்ஸ்செல் மென்பொருள் வெளிவிடப்பட்டது. இந்தப் பெயரை லோட்டஸ் 1-2-3 இல் உள்ளதனைத்தும் மற்றும் மேலதிகமான வேலையும் செய்யலாம் என்று சந்தைப் படுத்தினர். போர்லாண்ட் நிறுவனம் போலவே விண்டோஸ் இயங்குதளத்திற்கான பதிப்பை வெளிவிடுவதில் ஏற்பட்ட காலதாமதம் எக்ஸ்செல்லின் வெற்றியைத் தீர்மானித்தது. 1998 எக்ஸெல், லோட்டஸ் 1-2-3 மென்பொருளை வெற்றிக்கொண்டது. இதன் தற்போதைய பதிப்பானது எக்ஸெல் 2013. இதன் தற்போதைய போட்டியாளர்களாக கூகிள் டாக்ஸ் மற்றும் ஸ்பிரட்ஷீட்ஸ் மற்றும் ஒப்பிண் ஆபிஸ் ஆகியவை விளங்குகின்றன. லினக்ஸ் இயங்குதளத்தில் ஒப்பிண் ஆபிஸ் மென்பொருளே பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றது.
1993 இல் இருந்து பிரயோகங்களுக்கான விஷ்வல் பேஸிக் ஒருங்கிணைக்கப்பட்டது. இதனூடாக வடிவமைக்கப்டும் மக்ரோக்களே மக்ரோ வைரஸ் பரவலிற்கும் காரணமாக அமைந்தது.
மைக்ரோபட் எக்ஸெல் ஐகானில் XL என்ற எழுத்துக் காணப்படும்.
Remove ads
ஆரம்பித்தல்
எக்செல் ஐ ஆரம்பிக்க Start -> Run -> Excel என்று தட்டச்சுச் செய்தால் ஆரம்பிக்கும்.
வசதிகள்
- கலம் (cell) ஒன்றில் உள்ளீடு செய்யப்படும் தரவின் வகையைத் தானகவே கண்டறிந்து உரிய முறையில் காட்சிப்படுத்தும். அதாவது இலக்கம் ஒன்றை உள்ளிடப்பட்டால் இலக்கமாகவும். தேதி (திகதி) ஒன்றை உள்ளிடப்பட்டால் தேதியாகவும் காட்சிப்படுத்தும். இலக்கங்கள், தேதிகள் கலத்தின் வலப்பக்கத்தில் இருந்து இடமாக நிரப்பபடும் (Right Aligned) சொற்தொடர்கள் (text) இடப்பக்கத்தில் இருந்து வலப்புறமாக நிரப்பப்படும். இலக்கம் ஒன்றை சொற்தொடராகக் காட்டவேண்டும் என்றால் அந்த இலக்கத்தின் முன் ‘ (ஒற்றைக்கொம்பு) அடையாளமிட வேண்டும் அல்லது TEXT() சூத்திரத்தைப் பாவிக்கவேண்டும்.
- கலம் ஒன்றின் உள்ளீடு தவறுதலாக இருந்தாலோ அல்லது சூத்திரம் ஒன்று அநேகமாகத் தவறாக இருக்ககூடிய சந்தர்பக்கங்களின் கலத்தின் இடது மேல் மூலையில் சுட்டித்தனமான சிட்டை (smart tag) ஒன்றை இணைத்துக்காட்டும். இதைச் சொடுக்குவதன் மூலம் (click) காரணத்தை இனம் கண்டு தவறாக இருப்பின் அதைச் சீர்செய்து கொள்ளலாம். எ.கா: கலம் ஒன்றில் 12 என்ற இலக்கத்தை '12 என உள்ளீடு செய்தால் இலக்கம் ஒன்று சொற்தொடராக உள்ளீடு செய்யப்படுள்ளாக சுட்டித்தனமான சிட்டை காட்டிக்கொடுக்கும்.
- கணித்தல்களைச் செய்யலாம் (கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் போன்றவற்றிற்கு எளிய முறையிலும் மற்றும் அட்சரகணிதக் கோவைகளுக்கு சார்புகளை எழுதித் தீர்வுகாண இயலும்)
- உள்ளீடு செய்யும் தரவுகள் ஓர் வீச்சுக்குள் உள்ளதா என்பதைச் சரிபார்த்தே அனுமதிக்கும் வசதி. அத்துடன் அவ்வாறு வீச்சுக்குள் அமையாத தரவுகளை உள்ளிட முயலும் போதான பிழைச் செய்தியையும் விரும்பியவாறு வடிவமைக்கக்கூடியதான தமிழ் ஒருங்குறியூடான ஆதரவு.
- தரவுகளை விரும்பியவாறு வரிசைப்படுத்த இயலுவதோடு தேவையான தரவை மாத்திரம் பார்க்கும் லிஸ்ட் வசதி.
- தரவுகளைப் பொறுத்துத் தானாகவே நிறமூட்டும் நிபந்தனைகளுடன் தரவைக் காட்டும் Conditional Formatting வசதி.
- வரைபுகளை விரும்பியடி தேர்ந்தெடுக்க முடிவதோடு இவை யாவும் இயங்கு நிலையில் தரவுகள் மாறும்போது மாற்றமடையக்கூடியன.
- ஓர் வரைதாளில் இருந்து இன்னேர் வரைதாளில் உள்ள தரவைப் பெற்றுக் கொள்ளும் வசதி.
- மீயிணைப்பு என்னும் இணையத்தளங்களிற்கும் மின்னஞ்சல் முகவரிகளுக்குமான இணைப்பை ஏற்படுத்தும் வசதி.
- XML கோப்புக்களைக் கையாளும் வசதி. XML கோப்பினை XML அட்டவணையாகவோ, வாசிக்கமாத்திரம் இயலுமான நிலையிலோ அல்லது XML இலின் மூலத்தை பணிச்சூழலுக்குக் கொண்டுவருதலோ இயலும். இவ்வாறு பணிச்சூழலுக்குக் கொண்டுவந்தால் XML ஐ வேண்டிய தகவலை மாதிரம் பெற்றுக் கொள்ளும் வசதியினை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
Remove ads
சூத்திரங்களை (functions) எழுதும் முறை
- = குறியீடு இது எக்செலின் சூத்திரம் ஆரம்பிப்பதைக் குறிக்கிறது.
- சூத்திரத்தின் பெயர் - இது சூத்திரத்தை அடையாளம் காண உதவுகிறது
- (மாறிகள்) - ஒர் சூத்திரத்தின் மாறிகள். இது ஒன்றோ பலவோ ஒன்றும் இல்லாமலோ இருக்கலாம் ஆயினும் அடைப்புக்குறி கட்டாயமாகப் போடப்படவேண்டும்.
எக்செல் சூத்திரங்கள் பின்வரும் வகையில் முன்னுரிமைப்படுத்தப்பட்டுத் தீர்க்கப்படும்
- அடைப்புக்குறிகள்
- அடுக்குகள், மூலங்கள் (வர்க்க, கன)
- பெருக்கல், வகுத்தல்
- கூட்டல், கழித்தல்
எக்செல் 2010 இலிருந்து 64 சூத்திரங்களை ஒரே சமயத்தில் பின்னிப் பிணைந்து (nested) பாவிக்க இயலும். பழைய எக்செல் பதிப்புக்களில் 7 சூத்திரங்களையே ஒரே நேரத்தில் பின்னிப்பிணைந்து பாவிக்க இயலும்.
Remove ads
தமிழ், ஏனைய இந்திய மொழிகளின் ஆதரவு
மைக்ரோசாப்ட் ஆபிஸ் XP பதிப்பில் இருந்து தமிழ் உட்பட ஏனைய இந்திய மொழிகளை ஒருங்குறியூடாக ஆதரிக்கின்றது. மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2000 விண்டோஸ் 2000 வெளிவருவதற்கு முன்னரே வெளிவந்ததால் இந்திய மொழிகளை ஒருங்குறியூடாக ஆதரிக்காது. இவை ஆங்கிலம் போலவே தமிழிலும் வரிசைப்படுத்தக் (அல்லது வகைபடுத்த - Sort) கூடியவையே. விண்டோஸ் கட்டுப்பாட்டுப் பகுதி ஊடாக மொழி மற்றும் பிராந்திய தேர்வுகளூடாக மொழியை தமிழாக மாற்றுவதன் மூலம் நாணயக் குறியீட்டை ரூபாய்க்கு மாற்றறுவதுடன் திகதியையும் தமிழாக மாற்றவியலும். எனினும் நாணயக்குறியீடு தமிழ் ரூபாய் குறியீடான ௹ ஐ விடுத்து இந்திய ரூபாய் குறியீடான ₹ ஐயே எடுத்துக்கொள்ளும்.
குறிப்பு: தரவுகளை வரிசைப்படுத்துதலை (sorting) தமிழிலோ ஏனைய இந்திய மொழிகளிலோ ஒருங்குறியில் இருந்தால் மாத்திரமே செய்யலாம். தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை மற்றும் பாமினி போன்ற எழுத்துருக்களில் செய்யவியலாது. CHAR() சூத்திரம் அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறை ஐ மாத்திரமே ஆதரிக்கும் ஒருங்குறியை அல்ல. [1] இதுபோன்றே CHAR() சூத்திரமும் ஆயினும் ஒருங்குறி பாவிக்கப்பட்டால் பிழைச்செய்திவராமல் 63 என்ற விடையையே தரும். எக்செல் இன் (Left, right, mid, len போன்ற) சூத்திரங்கள் தமிழில் சரிவர இயங்காது. ஏனெனில் தமிழில் அநேகமாக ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்து தமிழ் எழுத்துருவைத் தோற்றுவிப்பதால் ஆகும்.
- எ.கா = CHAR("வி”) என்பதன் விடை 63 எனத் தவறாக வரும் ஒருங்குறியை ஆதரிக்காது என்ற பிழைச்செய்தி வராது.
- எ.கா: =LEN("விக்கிப்பீடியா") என்பதன் விடை 7 என்பதற்குப் பதிலாக 14 எனவரும்
- எ.கா: =LEFT("விக்கிப்பீடியா",1) என்பதன் விடை வி என்பதற்குப் பதிலாக வ என்று வரும்.
- எ.கா: =RIGHT("விக்கிப்பீடியா",2) என்பதன் விடை டியா என்பதற்குப் பதிலாக யா என்று வரும்.
Remove ads
விசைப்பலகைக் குறுக்குவழிகள்
- Ctrl+Space - முழு நிரலையும் (Column) தேர்வுசெய்ய.
- Shift+Space - முழு நிரையையும் (Row) தேர்வுசெய்ய
- Ctrl+A - முழுவதையும் தெரிவுசெய்ய.
- Ctrl+Shift+0 - விமர்சனம் (comment) உள்ள கலங்களை (cell) மாத்திரம் தேர்வு செய்ய.
- Shift+Arrowkey - தேர்வு செய்த கலங்களை விரும்பிய திசையில் விரிவாக்க
துல்லியத்தன்மை
எக்செல் இலக்கங்களை 15 பொருளுடைய (significant figures) இலக்கங்களாகவே செமித்துக்கொள்ளும். இதனால் 16 இலக்கமுள்ள கடனட்டை (credit card) இலக்கத்தை இலக்கமாக சேமிக்க இயலாது ஆயினும் சொற்தொடராகச்(text) சேமித்துக் கொள்ளலாம். சூத்திரங்களைக் கணித்தபின் கிடைக்கும் துல்லியத்தன்மை இதனைவிடக்குக் குறைவானதெனினும் பெரும்பாலான கணித்தல்களுக்கு எக்செல் போதுமானதாகும். எக்செல் சமன்பாடுகளின் விடையைப் பொதுவாக 11 பொருளுடைய இலக்கங்களாகக் எக்செலில் காட்சிப்படுத்தும்.
Remove ads
வார்ப்புரு
எக்செல் பயனர்கள் உருவாக்கும் வார்புருக்கள் (templates) %AppData%\Microsoft\Templates இல் வழமையாக சேமிக்கப்படும். இதன் வழமையான சேமிப்பு இடத்தை மாற்றுவதானால் மைக்ரோசாப்ட் வேட் ஊடாகவே செய்யலாம். [2]. 64பிட் இயங்குதளக் கணினிகளில் 32 பிட் ஆபிஸ் நிறுவப்பட்டிருந்தால் வார்ப்புருக்கள் C:\Program Files (x86)\Microsoft Office\Templates\1033 சேமிக்கப்பட்டிருக்கும்.
இவறையும் பார்க்க
- மைக்ரோசாப்ட் எக்ஸ்செல்
- மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் பயிற்சி
- தமிழ் மூலம் எக்செல் - றமணன் - குவிக்ரெக் அக்கடமி கொழும்பு, இலங்கை
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads