மைக்குரோனீசியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மைக்குரோனீசியா (Micronesia, [ˌmaɪkroʊˈniʒə] , என்பது ஓசியானியாவின் ஒரு பிரிவாகும். இது பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளை உள்ளடக்கியது. இதன் வடமேற்கே பிலிப்பீன்ஸ், மேற்கு மற்றும் தெற்கே இந்தோனீசியா, பப்புவா நியூ கினி, மெலனீசியா, கிழக்கே பொலினீசியா ஆகியனவும் அமைந்துள்ளன. மைக்குரோனீசியா என்னும் சொல் கிரேக்க மொழியில் μικρός (சிறிய), νῆσος (தீவு), அதாவது சிறிய தீவுகள் என்று பொருள். மைக்குரோனீசியா என்ற சொல் இப்பிரதேசத்திற்கு முதன் முதலில் 1831 ஆம் ஆண்டில் தரப்பட்டது.


Remove ads
புவியியலும் வரலாறும்
மேற்கு பசிபிக் பகுதியில் பரந்துள்ள நூற்றுக்கணக்கான சிறிய தீவுகளை இப்பிரதேசம் கொண்டுள்ளது. மைக்குரோனீசியாவில் தோன்றிய ஒரேயொரு இராச்சியம் யாப் என்ற தீவை மையமாகக் கொண்டிருந்தது.
அரசியல் அமைப்புப் படி மைக்குரோனீசியா முக்கியமாக எட்டு நாடுகள் மற்றும் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
குவாம்
கிரிபட்டி
மார்சல் தீவுகள்
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் (இது பொதுவாக "மைக்குரோனீசியா", அல்லது "FSM" என அழைக்கப்படும்)
நவூரு
வடக்கு மரியானா தீவுகள்
பலாவு
வேக் தீவு
பெரும்பாலான தீவுகள் ஐரோப்பியரின் ஆளுமைக்கு ஆரம்பத்திலேயே உட்பட்டிருந்தன. குவாம், வடக்கு மரியானாக்கள், கரொலைன் தீவுகள் (பின்னர் FSM, பலாவு) ஆகியன ஸ்பானியரின் காலனித்துவ தீவுகளாக ஆரம்பத்தில் இருந்தன. இவை 17ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் 1898 வரை ஸ்பானிய கிழக்கிந்தியாவின் பகுதியாக இருந்து ஸ்பானியரின் பிலிப்பீன்சின் நிர்வாகத்தில் இருந்தன. முழுமையான ஐரோப்பிய ஆளுகை 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது. அப்போது இது பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன:
- ஐக்கிய அமெரிக்கா: 1898 இல் ஸ்பானிய அமெரிக்கப் போரை அடுத்து ஐக்கிய அமெரிக்கா குவாமைக் கைப்பற்றி, வேக் தீவில் குடியேற்றத்தை ஆரம்பித்தது.
- ஜெர்மனி: நவூருவை தனது ஆளுமைக்கு உட்படுத்தியது. பின்னர் மார்சல், வடக்கு மரியானா, கரொலைன் ஆகியவற்றை ஸ்பெயினிடமிருந்து கொள்வனவு செய்தது.
- பிரித்தானியா: கில்பேர்ட் தீவுகள் (கிரிபட்டி)யைத் தனது ஆளுகைக்குட்படுத்தியது.
முதலாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் பசிபிக் தீவுப் பகுதி பறிக்கப்பட்டது. நவூரு அவுஸ்திரேலியாவுக்குத் தரப்பட்டதூ. ஏனையவை ஜப்பானுக்கு தரப்பட்டது. இரண்டாம் உலகப் போரை அடுத்து ஜப்பானியரின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் ஐக்கிய நாடுகளின் பொறுப்பில் ஐக்கிய அமெரிக்கா தனதாக்கிக் கொண்டது.
இன்று, குவாம், வேக் தீவு, வடக்கு மரியானா தீவுகள் என்பவை தவிர்த்து அனைத்து தீவுகளும் விடுதலை அடைந்த த்ஹனி நாடுகளாக உள்ளன.
Remove ads
மக்கள்
இங்குள்ள மக்கள் மைக்குரோனீசியக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றனர். இது மெலனீசியர்கள், பிலிப்பீனியர்கள், மற்றும் பொலினீசியர்களின் கலாச்சாரங்களின் கலப்பாகும். இக்கலப்பினால் இங்கு வாழும் மக்கள் தம்மை மெலனீசியா, பொலினீசியா மற்றும் பிலிப்பீன்ஸ் இனத்தவர்களுடன் ஒத்தவர்களாகத் தம்மைக் கருதுகின்றனர். இங்குள்ள யாப் இனத்தவர்கள் வடக்கு பிலிப்பீன்சின் ஆஸ்திரனீசிய பழங்குடிகள் ஆவர்.
மொழிகள்
பல்வேறு மைக்குரோனீசிய பழங்குடிகளின் தாய்மொழி ஆஸ்திரனீசிய மொழிக் குடும்பத்தின் ஓசியானிய உபகுழுவைச் சேர்ந்தனவாகும். ஆனாலும், இதற்கு விதிவிலக்காக மேற்கு மைக்குரோனீசியாவின் பின்வரும் இரண்டு மொழிகள் மேற்கு மலாய பொலினீசிய உபகுழுவைச் சேர்ந்தவை:
- சமாரோ, டனபாக் மற்றும் கரொலீனியம் (இவை மரியானா தீவுகளில் வழக்கிலுள்ளன.
- பலாவு மொழி.
இந்த மேற்கு மலாய பொலினீசிய உபகுழு இன்று பிலிப்பீன்ஸ், மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளிலும் வழக்கிலுள்ளன.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads