கிரிபாஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிரிபாஸ் (ஆங்கிலம்: Kiribati) (கில்பேர்ட்டீஸ் மொழி: kiribas (கிரிபாஸ்), ஆங்கிலம்:[ˌkɪrəˈbɑti]), என்பது மத்திய பசிபிக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். உத்தியோகபூர்வமாக கிரிபாஸ் குடியரசு என அழைக்கப்படுகிறது. இது மொத்தம் 33 தீவுகளைக் கொண்டுள்ளது.[1]. இவை அனைத்தும் 3,500,000 கி.மீ.² பரப்பளவில் உள்ளன. அனைத்து தீவுகளும் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான அகலத்தையே கொண்டுள்ளன. பிரிட்டன் ஆட்சிக்காலத்தில், இந்தத் தீவுகள் கில்பர்ட் என அழைக்கப்பட்டன. இந்த பெயரே மருவி கிரிபாஸ் ("டி" என்ற உச்சரிப்பு கிரிபாஸ் மொழியில் "ஸ" என்று ஒலிக்கப்படுவதாக[2]) என ஆனது. பெருகிவரும் நீர்ப்பரப்பால், இந்த தீவுகள் விரைவில் மூழ்கக்கூடும் என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.[1]

Remove ads
போக்குவரத்து
வான்வழிப் போக்குவரத்திற்கு, கிரிபாஸ்சின் பெரிய தீவில் ஒரே ஒரு வானூர்தி நிலையம் உள்ளது. இங்கிருந்து பிஜியின் நந்தி நகரத்திற்கு வானூர்திகள் செல்கின்றன. தரைவழிப் போக்குவரத்திற்கு ஒரு சாலை உள்ளது.
பண்பாடு
மனேபா என்ற கட்டிடம் உள்ளது. இது அரசு அலுவலகமாகவும், தேவாலயமாகவும், சமூகக்கூடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் சமூகமாகவே வாழ்கின்றனர். இங்குள்ள மக்கள் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். கிரிபாஸ் மொழியில் இறைவனுக்கான துதி பாடுகின்றனர். பெரும்பான்மையானோர் வீட்டில் பன்றி வளர்க்கின்றனர். மீன்பிடித்தலையும், உழவுத்தொழிலையும் செய்கின்றனர். கவா என்ற செடியில் இருந்து பெறப்படும் சாற்றை மதுவிற்கு மாற்றாக அருந்துகின்றனர்.
Remove ads
மக்கள்
தலைநகரான தெற்கு டராவாவில், 51,000 பேர் வாழ்கின்றனர். இது சதுர கி.மீக்கு 5,000 பேர் என்ற அளவில் உள்ளது..
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads