மொட்ட சிவா கெட்ட சிவா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மொட்ட சிவா கெட்ட சிவா 2017 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ், சத்யராஜ் மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில், சாய் ரமணி இயக்கத்தில், ஆர். பி. சௌத்ரி தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3][4][5][6]. 2015 ஆம் ஆண்டு வெளியான தெலுங்குப் படமான பட்டாஸ் என்பதை மறுஆக்கம் செய்து தமிழில் உருவாக்கப்பட்டது[7]. இப்படம் இந்தியில் ஏ.சி.பி. சிவா என்ற பெயரில் மொழிமாற்றப்பட்டு வெளியானது.
Remove ads
கதைச்சுருக்கம்
காவல் துணை ஆணையராக பணியாற்றும் சிவக்குமார் இ.கா.ப என்கிற சிவா (ராகவா லாரன்ஸ்) சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு பணியேற்கிறார். அவருடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி லஞ்சம் பெற்று தான் நினைத்தபடி வாழ்கிறார். சென்னை காவல் ஆணையரான கிருபாகரனுக்கு (சத்யராஜ்) சிவாவின் செயல்கள் பெரும் இடையூறை ஏற்படுத்துகின்றன. உண்மையில் சிவா, கிருபாகரனின் மகன் ஆவார். கிருபாகரனின் அலட்சியத்தால் அவனது தாய் (சுகன்யா) மற்றும் சகோதரி இறந்துபோகின்றனர். ஆனால் காவல்துறைப் பணியில் இருக்கும் கிருபாகரன் தெரிந்தே அந்தத் தவறை செய்யவில்லை. அவரது பணியின் காரணமாக ஒரு கலவரத்தைக் கட்டுப்படுத்த சென்றதால் அவருடைய மனைவி மற்றும் குழந்தையைக் கவனிக்க இயலாமல் போகிறது. இதை அறியாத அவரது மகன் சிவா வீட்டை விட்டு வெளியேறி அநாதை இல்லத்தில் சேர்கிறான். படித்து இந்தியக் காவல் பணித்தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறையில் பணியேற்றவன் தன் தாயின் இறப்புக்குக் காரணமான தன் தந்தை கிருபாகரனுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி அவர் நிம்மதியைக் கெடுக்க வேண்டும் என்பது அவனது நோக்கம்.
சிவா, நிருபரான ஜானுவின் (நிக்கி கல்ராணி) மீது காதல் கொள்கிறான். சிவா தங்கையாக நேசிக்கும் பேச இயலாத மாற்றுத்திறனாளிப் பெண்ணான நித்யா, நாடாளுமன்ற உறுப்பினரான ஜி.கே.யின் (அசுதோஷ் ராணா) தம்பி சஞ்சயால் (வம்சி கிருஷ்ணா) கொல்லப்படுகிறாள். ஜி.கே.யின் சட்ட விரோத செயல்களுக்கு ஆதரவளித்து வந்த இதனால் ஆத்திரம் கொள்ளும் சிவா இந்தக் கொலைக்குப் பிறகு அவர்களை எதிர்க்கிறான். சஞ்சயை கைது செய்கிறான்.
அந்தக் கொலையின் சாட்சியான ஒரு திருநங்கை மற்றும் ஜானு இருவரையும் கடத்தும் ஜி.கே., சஞ்சயை விடுவிக்காவிட்டால் அவர்களைக் கொன்றுவிடுவதாக சிவாவை மிரட்டுகிறான். அவர்களைக் காப்பாற்ற சிவாவும் கிருபாகரனும் இணைந்து முயற்சிக்கின்றனர். அதில் கிருபாகரன் படுகாயமடைகிறார். திருநங்கையை அவர்கள் கொன்றுவிட ஜானுவைக் காப்பாற்றும் சிவா, ஜி.கே.யைக் கொல்கிறான். தன் தந்தை கிருபாகரனைப் புரிந்துகொண்டு அவரைத் தந்தையாக ஏற்றுக்கொள்கிறான்.
Remove ads
நடிகர்கள்
- ராகவா லாரன்ஸ் - சிவக்குமார் (சிவா)
- சத்யராஜ் - கிருபாகரன்
- நிக்கி கல்ராணி - ஜானு
- அசுதோஷ் ராணா - ஜி.கே.
- சுகன்யா - சிவாவின் தாய்
- தேவதர்ஷினி - பானு
- கோவை சரளா - வைஜயந்தி
- வி. டி. வி. கணேஷ் - சக்திவேல்
- சதீஸ் - சதிஷ்
- ராசேந்திரன் - சுனாமி ஸ்டார் சுபாஷ்
- வம்சி கிருஷ்ணா - சஞ்சய்
- தம்பி ராமையா - உள்துறை அமைச்சர்
- ஸ்ரீமன் - காசி
- சாம்ஸ் - சாமு
- பாண்டு - மருத்துவர்
- ஜி. வி. குமார்
- சரன்தீப்
- பவானி ரெட்டி
- அனுபமா குமார்
- அஷ்வின் ராஜா
- மனோபாலா
- மயில்சாமி
- மதன் பாப்
- மகாநதி சங்கர்
- சரிகா நாயுடு
- காக்கா முட்டை ரமேஷ் - சிறுவயது சிவா
- ராய் லட்சுமி - சிறப்புத் தோற்றம்
Remove ads
விமர்சனம்
ரஜினிகாந்த் பாராட்டு: மொட்ட சிவா படக்குழுவை அழைத்துப் பாராட்டினார் ரஜினி[8].
விகடன்: தெலுங்குப்படத்தின் மறுஆக்கம் என்பதால் தெலுங்குப்படங்களைப் போலவே உள்ளது[9].
தினத்தந்தி: விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் சாய்ரமணி[10].
தினமலர்: அம்ரீஷ் கணேசின் இசையில் பாடல்கள் அருமை[11].
நியூ தமிழ் சினிமா: ஒவ்வொரு பாடலும், அதற்கு நடனம் அமைக்கப்பட்ட விதமும் இசை ரசிகர்களுக்கு பெரும் விருந்து![12]
தி இந்து தமிழ்: எதிர்மறையான விமர்சனத்தை வழங்கியுள்ளது[13].
இந்தியாக்ளிட்ஸ்: ராகவா லாரன்ஸ் ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்கும்[14].
சினிப்பில்லா: ஒளிப்பதிவு படத்தின் பலம்[15].
டெய்லிஹன்ட்: மொட்ட சிவா கெட்ட சிவா - கோட்டை விட்ட சிவா[16].
இசை
படத்தின் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads