மொண்டெனேகுரோ

From Wikipedia, the free encyclopedia

மொண்டெனேகுரோ
Remove ads

மொண்டெனேகுரோ (Montenegro) அல்லது மொண்டெனேகுரோ குடியரசு தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடாகும். இந் நாட்டின் பெயர் செர்னகோரா (கேட்க) என்று அந்நாட்டு மக்கள் அழைக்கின்றனர். தெற்கில் அட்டிரியேடிக் கடலைக் கொண்டுள்ள மொண்டெனேகுரோ மேற்கில் குரோசியாவையும், வடமேற்கில் பொசுனியாவும் எர்செகோவினாவும்வையும் வடகிழக்கில் செர்பியாவையும், தென்கிழக்கில் அல்பேனியாவையும் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் Република Црна ГораRepublika Crna Goraமொண்டெனேகுரோ குடியரசு, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...
Thumb

ஐரோப்பிய மத்திய காலத்தில் இருந்து 1918வரை சுதந்திர நாடாக காணப்பட்ட இந்நாடு பின்வந்த காலங்களில், யுகோசுலாவியா மற்றும் செர்பியாவும் மொண்டெனேகுரோவும் போன்ற பல ஒன்றியங்களில் இணைந்திருந்தது. 2006 மே 21இல் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பின் முடிவுகளின் படி மொண்டெனேகுரோ யூன் 3 2006 இல் விடுதலை பிரகடனத்தை செய்தது. யூன் 28 2006இல் ஐக்கிய நாடுகளின் 192வது [1] நாடாக இணைத்துக்கொள்ளப்பட்டது.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads