மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில், தமிழ்நாட்டில் நாமக்கல், மோகனூர் என்னுமிடத்தில் உள்ளது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

விரைவான உண்மைகள் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயில், நாமக்கல், புவியியல் ஆள்கூற்று: ...
Remove ads

இறைவன், இறைவி

இங்குள்ள இறைவன் அசலதீபேஸ்வரர் ஆவார். இறைவி மதுகரவேணியம்பிகை ஆவார்.

தல வரலாறு

இத்தலத்தில் குமராயி என்ற சிவபக்தை தயிர் விற்கும் வியபாரம் செய்து வந்துள்ளார். அவர் சிவபெருமானுக்கு தயிரை பிரசாதமாக தந்து வேண்டியமையால் குழந்தைக்கு தாயானார். ஊர்மக்கள் ஏசவே, இத்தலத்திற்கு அருகேயுள்ள காவேரியில் விழுந்து இறந்தார். அங்கு அம்பிகை காட்சிதந்தமையால் அம்பிகையை குமராயி என்றும் மூலவரை குமரப்பன் என்றும் அழைக்கின்றனர். இத்தலத்தினை தேவார வைப்புத் தலமாக கூறுகின்றனர்.

தெய்வங்கள்

இக்கோயிலில் விநாயகர், முருகன் உடன் வள்ளி, தெய்வானை, ஐயப்பன், தட்சணாமூர்த்தி , சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை, பைரவர், சரஸ்வதி, பிரம்மா, 63 நாயன்மார்கள், நவக்கிரகங்கள் ஆகியோர் உள்ளனர்.

முக்கிய பண்டிகைகள்

இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads