மோர்டிமர் வீலர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சர் ராபர்ட் எரிக் மோர்டிமர் வீலர் (Sir Robert Eric Mortimer Wheeler) (பிறப்பு:10 செப்டம்பர் 1890 – 22 சூலை 1976) ஐக்கிய இராச்சியத்தின் இராணுவ அதிகாரியாகவும், தொல்லியல் அறிஞரும் ஆவார். இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் எட்டாவது தலைமை இயக்குநராகவும், வேல்ஸ் மற்றும் இலண்டன் அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும் பணியாற்றியவர். இவர் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் தொல்லியல் நிறுவனத்தையும் நிறுவியர் ஆவார். இவர் தொல்லியல் தொடர்பாக 24 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
Remove ads
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1944–48

மோர்டிமர் வீலர் 1944-இல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநர் பதவியில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தார். இவர் புது தில்லியில் தேசிய அருங்காட்சியகத்தை நிறுவினார்.
அக்டோபர் 1944-இல் இவர் தட்சசீலத்தில் பி. பா. லாலுடன் இணைந்து ஆறு மாதம் அகழாய்வுப் பணியை துவக்கினார். சிந்துவெளி நாகரிகப் பகுதிகளான மொகஞ்சதாரோ மற்றும் அரப்பா பகுதிகளில் விரிவான அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கினார். மேலும் தென்னிந்தியாவில் அரிக்கமேடு தொல்லியல் களத்தில் அகழாய்வுப் பணி மேற்கொண்டதன் மூலம் ரோமப் பேரரசில் இருந்து பொருட்கள் வர்த்தகம் செய்த கிபி முதல் நூற்றாண்டின் ஒரு துறைமுகத்தை வெளிப்படுத்தினார். அகழ்வாராய்ச்சியின் போது இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த போதிலும், கடுமையான மழை மற்றும் வெப்பமண்டல வெப்பத்தால் அகழ்வாராய்ச்சி பாதிக்கப்பட்டது. பின்னர் இவர் மைசூர் அருகே உள்ள பிரம்மகிரியில் ஆறு பெருங்கற்காலம் தொர்பான அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டார். இது தென்னிந்தியாவின் தொல்பொருளியலுக்கான காலவரிசையைப் பெற அவருக்கு உதவியது.
Remove ads
படைத்த நூல்கள்
மோர்டிமர் வீலரின் நூல்கள்:[1] and again by Hawkes in her biography.[2]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads