மோர்வி இராச்சியம்
மோர்வி இராச்சியம் ', இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவில் இருந்த 562 சுதேச சமஸ்தா From Wikipedia, the free encyclopedia
Remove ads
'மோர்வி இராச்சியம் (Morvi State, also spelled as Morvee State or Morbi State)', இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவில் இருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பத்தில் மோர்வி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மோர்வி இராச்சியம் 627 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 42,602 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.


Remove ads
வரலாறு
மோர்வி இராச்சியம் 1698-ஆம் ஆண்டில் கட்ச் பகுதியின் கன்யோஜி ராவாஜியால் நிறுவப்பட்டது. [1] 1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற மோர்வி இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக விளங்கினர். இது பம்பாய் மாகாணத்தின் கத்தியவார் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 1948-இல் மோர்வி இராச்சியம் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, மோர்வி இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
Remove ads
ஆட்சியாளர்கள்
மோர்வி ஆட்சியாளர்களை தாக்கூர் அல்லது மகாராஜாக்கள் என்பர்.[2]
ஆட்சியாளர்கள்
- 1698 - 1733 கட்ச்சின் கன்யோஜி ராவாஜி (இறப்பு. 1733)
- 1733 - 1739 அலியாஜி கன்யோஜி (இ. 1739)
- 1739 - 1764 முதலாம் ராவாஜி அலியாஜ (இ. 1764)
- 1764 - 1772 பச்சன் ஜி ராவாஜி (இ. 1772)
- 1772 - 1783 முதலாம் வாகாஜி ராவாஜி (இ. 1783)
- 1783 - 1790 ஹமிர்ஜி வாகாஜி (இ. 1790)
- 1790 - 1828 ஜெயஜி வாகாஜி (இ. 1828)
- 1828 - 1846 பிரிதிராஜ் ஜி ஜெயஜி (இ. 1846)
- 1846 - 17 பிப்ரவரி 1870 ராவாஜி இரண்டாம் பிரிதிராஜ் ஜி (பிறப்பு. 1828 - இறப்பு. 1870)
- 17 பிப்ரவரி 1870 – 11 சூலை 1922 வாகாஜி இரண்டாம் இராவாஜி (பி. 1858 - இ. 1922)
- 17 பிப்ரவரி 1870 - 1 சனவரி 1879 அரசப்பிரதிநிதி
- - சாம்பு பிரசாத் லக்சிலால்
- -ஜுஞ்சாபாய் சக்திதாஸ்
- 11 சூலை 1922 – 3 சூன் 1926 லக்திர்ஜி வாகாஜி (பி. 1876 - இ. 1957)
- 3 சூன் 1926 – 15 ஆகஸ்டு 1947 லக்தீரஜ் வாகாஜி
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads