மோர்பி மாவட்டம்
குசராத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மோர்பி மாவட்டம் (Morbi district) (குசராத்தி: મોરબી જિલ્લો) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 15 ஆகஸ்டு 2013-இல் புதிதாக துவக்கப்பட்ட 7 புதிய மாவட்டங்களில் ஒன்றாகும்.[1][2] இம்மாவட்டம் இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. மாவட்டத் தலைமையகம் மோர்பி நகரம் ஆகும். இது ராஜ்கோட் நகரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இம்மாவட்டப் பகுதிகளை மோர்பி சமஸ்தானம் ஆண்டது.

மோர்பி மாவட்டத்திற்கு, வடக்கே கட்ச் மாவட்டம், கிழக்கே சுரேந்திரநகர் மாவட்டம், தெற்கே ராஜ்கோட் மாவட்டம், மேற்கே ஜாம்நகர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.
Remove ads
பெயர்க்காரணம்
குஜராத்தி மொழியில் மோர்பி எனில் மயில் எனப் பொருள். பூஜ் நாட்டு மன்னர் (king of Bhooj) மயில் எனப்பொருள் விளங்கும்படி இப்பகுதிக்கு மோர்பி எனப் பெயரிட்டார்.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி, மோர்பி மாவட்ட மக்கட்தொகை 9,60,329 ஆகும். இதன் பரப்பளவு 4871.5 சதுர கி.மீ., ஆகும். ஒரு சதுர கிலோ மீட்டருக்கு மக்கள்தொகை அடர்த்தி 207 நபர்கள். மாவட்ட சராசரி எழுத்தறிவு 84.59% ஆகும்.
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் 5 வருவாய் வட்டங்களும், 349 கிராம ஊராட்சிகளும் கொண்டது.[3]
வருவாய் வட்டங்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads