மோல்டாவியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மோல்டாவியா (Moldavia, உருமானியம்:Moldova), Цара Мѡлдовєй (பழைய உருமானிய சிரில்லிய நெடுங்கணக்கில்) கிழக்கு ஐரோப்பாவில் கீழ்கார்பேதியப் பகுதிக்கும் டினீயெஸ்டர் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்த முன்னாள் வேள்பகுதியும் வரலாற்று நிலப்பகுதியுமாகும். துவக்கத்தில் சுதந்திரமான, பின்னாளில் தன்னாட்சி பெற்ற நாடாக 14ஆம் நூற்றாண்டிலிருந்து 1859 வரை இருந்து வந்தது. 1859இல் வலாச்சியா (Țara Românească) உடன் இணைந்தது தற்கால உருமேனியாவின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது; வரலாற்றின் பல்வேறு காலங்களில் மோல்டாவியாவில் பெசராபியா, புகோவினா, எர்ட்சா பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. சிறிது காலத்திற்கு பொகுட்யாவும் இதன் அங்கமாகவிருந்தது.
மேற்குப் பாதி மோல்டாவியா தற்போதைய உருமேனியாவின் ஓர் வலயமாக உள்ளது;கிழக்குப் பகுதி மல்தோவா குடியரசாகவும் வடக்குப்பகுதி, தென்கிழக்குப் பகுதிகள் உக்ரைனின் அங்கங்களாகவும் உள்ளன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads