வலாச்சியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வலாச்சியா அல்லது வல்லாச்சியா ( Walachia, Wallachia ) உருமேனியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் புவியியல் பகுதியுமாகும். இது கீழ் தன்யூபிற்கு வடக்கிலும் தெற்கு கார்பத்தியனுக்கு தெற்கிலும் அமைந்துள்ள நிலப்பகுதியாகும். வலாச்சியா வழமையாக இரு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. பெரிய வலாச்சியா முந்தேனியா என்றும் சிறிய வலாச்சியா ஓல்தேனியா என்றும் அழைக்கப்படுகின்றது. சில நேரங்களில் முழுமையான வலாச்சியாவுமே முந்தேனியா எனப்படுகின்றது.
Remove ads
வரலாறு

வலாச்சியா அங்கேரியின் முதலாம் சார்லசுக்கு எதிராக, முதலாம் பாசரபால் 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வேள்பகுதியாக நிறுவப்பட்டது. 1246இலேயே ஓல்ட் ஆற்றின் மேற்கிலுள்ள பகுதி வலாச்சா என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1417இல் வலாச்சா உதுமானியப் பேரரசின் கப்பம் கட்டும் நாடானது;[4] இந்த ஏற்பாடு, இடையில் 1768 முதல் 1859 வரை சிறு இடைவெளிகளில் உருசிய ஆக்கிரமிப்பில் இருந்தபோதும், 19ஆம் நூற்றாண்டு வரை இது நீடித்தது. 1859இல் மோல்டாவியாவுடன் இணைந்து ஐக்கிய வேள்பகுதிகள் உருவானது. இந்த புதிய நாடு 1866இல் ரோமானியா என அழைக்கப்படலாயிற்று. 1881இல் அலுவல்முறையாக உருமேனியா இராச்சியமானது. பின்னர் ஆத்திரிய-அங்கேரிய இராச்சியத்தின் கலைப்பைத் தொடர்ந்து 1918இல் மக்கள் பிரதிநிதிகளின் தீர்மானப்படி புகோவினா, டிரான்சில்வேனியா மற்றும் பனத், கிரிசனா,மராமுரெசின் சில பகுதிகளும் உருமேனிய இராச்சியத்திற்கு வழங்கப்பட்டன. இதுவே தற்கால உருமேனிய நாடாக உருவானது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads