மௌனம் கலைகிறது
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மௌனம் கலைகிறது (Mounam Kalaikirathu) என்பது 1986 இல் குன்றை வேந்தன் கரிகாலன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். காதல் தொடர்பான இத்திரைப்படத்தில் சுரேஷ், ஜீவிதா, ஆனந்த் பாபு, ஜெயஸ்ரீ, விஜயகுமார், சின்னி ஜெயந்த், எஸ். எஸ். சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1986 திசம்பர் 12 அன்று வெளியிடப்பட்டது.[1]
Remove ads
கதைச்சுருக்கம்
ராஜேசும் தீபாவும் காதலர்கள், ஆனால் கண்ணனும் ராஜேசுடனான தீபாவின் உறவை அறியாமலேயே அவளை நேசிக்கிறான். சோபனா என்ற மருத்துவர், கண்ணனையும் நேசிக்கிறார். இந்த உறவு குறித்து ஆராயும் இப்படம், இறுதியாக மௌனம் கலைக்கிறது.
நடிகர்கள்
- சுரேஷ் - கண்ணன்
- ஜீவிதா - தீபா
- ஆனந்த் பாபு - இராஜேஷ்
- ஜெயஸ்ரீ - சோபனா
- விஜயகுமார்
- சின்னி ஜெயந்த்
- எஸ். எஸ். சந்திரன்
- செந்தில்
பின்னணிக் குரல்
ஜீவிதாவிற்கு அனுராதாவும், ஆனந்த் பாபுவிற்கு எஸ். என். சுரேந்தரும் பின்னணிக் குரல் கொடுத்திருந்தனர்.[2]
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர்-கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை வாலி , புலமைப்பித்தன், முத்துலிங்கம், வைரமுத்து, சிதம்பரநாதன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[3][4]
Remove ads
வரவேற்பு
இந்தியன் எக்சுபிரசிலிருந்து இவ்வாறு எழுதியிருந்தனர். "கதை இயல்பாக உருவாக்கப்பட்டது. சலிப்பாக இல்லை. நிகழ்ச்சிகள் நம்பகமானவை", சங்கர்-கணேஷ் "சில இனிமையான பாடல்களுடன் வந்துள்ளனர்".[5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads