யமலோ-நெனெத்து தன்னாட்சி வட்டாரம்

From Wikipedia, the free encyclopedia

யமலோ-நெனெத்து தன்னாட்சி வட்டாரம்
Remove ads

யமலோ-நெனெத்து தன்னாட்சி பிராந்தியத்தியம் (Yamalo-Nenets Autonomous Okrug; உருசிய மொழி: Яма́ло-Не́нецкий автоно́мный о́круг, Yamalo-Nenetsky Avtonomny Okrug; Nenets: Ямалы-Ненёцие автономной ӈокрук) என்பது ஒரு உருசிய கூட்டாச்சி அமைப்பைச் சேர்ந்த பகுதி (ரஷ்யாவின் தன்னாட்சி ஓக்குருகுகள்) ஆகும். இதன் நிர்வாக மையம் சலிகர்ட் ஆகும். இப்பிராந்தியத்தின் பெரிய நகரம் நோயாப்ரஸ்க் ஆகும். பிராந்தியத்தின் மக்கள் தொகை: 522,904 ( 2010 கணக்கெடுப்பு ).[7]

விரைவான உண்மைகள் யமலோ-நெனெத்துதன்னாட்சி பிராந்தியத்தியம், நாடு ...
Remove ads

புவியியல் மற்றும் இயற்கை வரலாறு

நெனெத்து மக்களே இப்பகுதியில் நீண்டகாலமாக எஞ்சியிருக்கும் பழங்குடிகள் ஆவர். இவர்களுடைய வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கை தொழில் வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் ஆகும். துருவக் கரடிகளை வேட்டையாடும் நடைமுறை தற்போதைய காலம் வரை தொடர்கிறது.[11]

வரலாறு

திசம்பர் 10, 1930 இல் இந்த தன்னாட்சி பிராந்தியத்திற்கான உரால் ஒப்லாஸ்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

மக்கள் தொகை

இந்த தன்னாட்சி பகுதியின் மக்கள் தொகை : 522,904 ஆகும் (2010 கணக்கெடுப்பின்படி); 507,006 (2002 கணக்கெடுப்பின்படி); 486,164 (1989 கணக்கெடுப்பு).

முதன்மை புள்ளிவிவரம்

மூலம்: ரஷியன் ஒருங்கிணைந்த மாநில புள்ளியியல் சேவை பரணிடப்பட்டது 2008-04-12 at the வந்தவழி இயந்திரம்
மேலதிகத் தகவல்கள் சராசரி மக்கள் தொகை (x 1000), பிறப்பு ...

2008 (சனவரி-அக்டோபர்) ஆண்டிற்கான பிராந்திய விளக்கப்பட்டியல்[12]

மேலதிகத் தகவல்கள் வட்டாரம், மக்கள் தொகை (2007) ...
Remove ads

இனக் குழுக்கள்

நினிட்ஸ் இன மக்கள் மக்கள் தொகையில் 5.9% வரை உள்ளனர். ரஷ்யர்கள் (61.7%), உக்ரேனியர்கள் (9.7%), தடார்கள் (5.6%). மற்ற முக்கியமான இன குழுக்களான பெலாரஷ்யர்கள் (1.3%), காண்ட்ஸ் (1.9%), அசர்பைசன்ஸ் (1.8%), பாஷ்கிர்ஸ் (1.7%), கோமி (1%), மொல்டோவன்ஸ் (0.9%) என்ற எண்ணிக்கையில் இனக்குழுவினர் உள்ளனர். (எல்லா விவரங்களும் 2010 கணக்கெடுப்பில் இருந்து).[7] கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் உள்ள இடங்களில் உருசிய மக்களின் எண்ணிக்கை வளர்கின்ற சில இடங்களில் ஒன்றாகும்.

மேலதிகத் தகவல்கள் இனக் குழு, 1939 மக்கள் தொகை கணக்கெடுப்பு ...
Remove ads

மதம்

2012 அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புப்படி[14][15] இந்த பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 42.2% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். 14% திருச்சபை இணைப்பில்லாத பொதுவாக இருக்கும் கிறித்தவர், 1% கிழக்கு மரபுவழி திருச்சபையை பின்பற்றுகின்றனர். 1% சுலாவிக் நாட்டுப்பற மதத்தினர் (சுலாவிக் நியோபகனியம்) அல்லது சமானிய மதம், 1% முதல் சீர்திருத்தத் திருச்சபை, முஸ்லிம்கள் , கெளகேசிய மக்கள், தட்டார்கள் போன்றோர் மொத்த மக்கள் தொகையில் 18% உள்ளனர். மக்கள் தொகையில் 14% மத ஈடுபாடு அற்றவர்கள். 8% நாத்திகர் மற்றும் 0.8% மதம் பற்றிய கேல்விக்கு பதிலளிக்காதவர்கள் ஆவர்.

Remove ads

பொருளாதாரம்

இந்த தன்னாட்சி பிராந்தியமே உருசியாவின் மிக முக்கிய இயற்கை எரிவாயு ஆதாரமாக இருக்கிறது. உருசியாவின் இயற்கை எரிவாயு உற்பத்தியில் 90% இங்கிருந்தே கிடைக்கிறது, மேலும் இந்தயில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய் என்பது உருசியாவின் எண்ணெய் உற்பத்தியில் 12% ஆகும்.[16] உருசியாவின் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான கேஸ்ப்ரோம் தன் முக்கிய தயாரிப்பு துறைகளை இங்கேயே அமைத்துள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய எரிவாயு உற்பத்தி நிறுவமான நோவாட்கி இப்பிராந்தியத்திலேயே அமைந்துள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads