உருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ரஷ்யாவின் கூட்டுக்குடியரசு 83 ஆட்சிப்பிரிவுகளைக் கொண்டவை. இந்த 83 ஆட்சிப்பிரிவுகளில் ஒவ்வொரு ஆட்சிப்பிரிவிற்கும் சமமான உரிமைகள் உண்டு. ஒவ்வொரு ஆட்சிப்பிரிவில் இருந்தும் இரண்டு இரண்டு சார்பாளர்கள் வீதம் ரஷ்யக் கூட்டரசு மன்றத்தில் (ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவையில்) பங்கு கொள்வார்கள். ஆனால் இந்த ஆட்சிப்பிரிவின் தன்னாட்சித் தன்மைகளில் வேறுபாடுகள் உண்டு.

ரஷ்ய கூட்டரசின் ஆட்சிப்பிரிவுகளின் வகைகள்

Thumb
ரஷ்ய கூட்டரசின் ஆட்சிப்பிரிவுகள்

கூட்டரசின் ஒவ்வொரு ஆட்சிப்பிரிவும் கீழ்க்கண்ட பிரிவு வகைகளின் ஏதேனும் ஒரு வகைப் பிரிவில் அடங்கும்:

21 உட்குடியரசுகள் (республики, ஒருமை. республика; respubliki, ஒருமை. respublika)—ஒவ்வொரு உட்குடியரசும் தன்னாட்சியுடையது. ஒவ்வொன்றுக்கும் ஒரு அரசியல் சட்டம், நாடாளுமன்றம், உட்குடியரசுத் தலைவர் உண்டு. வெளிநாட்டு உறவுகள் முதலிவற்றிற்கு ரஷ்ய கூட்டரசு பொறுப்பேற்கும். இக்குடியரசுகள் பெரும்பாலும் ஒவ்வொரு குறிப்பிட்ட இனங்களின் தாய்நிலங்களாகக் கருதப்படுகின்றன.
46 ஓப்லாஸ்துகள் (மாநிலங்கள்) (области, ஒருமை. область; ஓப்லாஸ்தி, ஒருமை ஓப்லாஸ்து)— இது பொதுவாகவும் பரவலாகவும் காணப்படும் ஆட்சிப்பிரிவு வகை. இவ் ஆட்சிப்பிரிவுக்கு ரஷ்ய கூட்டரசில் இருந்து அமர்த்தப்படும் ஆளுநர் ஒருவரும், இப்பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் கொண்ட சட்டமன்றம் உண்டு. இந்த ஆட்சிப் பிரிவில் உள்ள மிகப்பெரிய நகரத்தின் பெயரால் பெரும்பாலும் இந்த ஓப்லாஸ்து அழைக்கப்படும்.
9 கிராய்கள் (ஆட்சிப்பகுதிகள்) (края, ஒருமை. край; கிரயா (kraya), ஒருமை. கிராய் (krai)—இது பெரும்பாலும் ஓப்லாஸ்து போன்றதே. இவை ஒரு காலத்தில் எல்லைப்பகுதிகள் என்று கருதியதால் ஆட்சிப்பகுதிகள் (territories) என்று அழைக்கப்பட்டன.
1 தன்னாட்சி ஓப்லஸ்து (தன்னாட்சி மாநிலம்) (автономная область; ( யூத தன்னாட்சி ஓப்லாஸ்து)
4 தன்னாட்சி ஓக்குருகுகள் (okrugs) (தன்னாட்சி மாவட்டங்கள்) (автономные округа, ஒருமை. автономный округ; avtonomnyye okruga, ஒருமை. avtonomny okrug)—ஓப்லாஸ்துகளைவிட அதிக தன்னாட்சி உரிமைகள் கொண்டவை ஆனால் குடியரசுகளை விட குறைவான தன்னாட்சி உரிமைகள் கொண்டவை. பெரும்பாலும் பெரும்பான்மையும் ஓரின மக்கள் கொண்டதாக இருக்கும்.
2 கூட்டரசின் நேரடி நகரங்கள் (கூட்டரசின் நேரடி ஆட்சியில் இயங்கும் நகரங்கள்) (федеральные города, ஒருமை. федеральный город; ஃவெடரால்ன்யெ 'கொரோடா (federalnyye goroda), ஒருமை. ஃவெடர்லால்னி 'கோரோ'ட் (federalny gorod)—தனி ஆட்சிப்பகுதிகளாக இயங்கும் பெரிய நகரங்கள்.
Remove ads

கூட்டரசின் ஆட்சிப்பிரிவுகளின் பட்டியல்

Thumb
மேலதிகத் தகவல்கள் குறியீடு, பெயர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads