யான் மாவட்டம்

மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

யான் மாவட்டம்map
Remove ads

யான் மாவட்டம் என்பது (மலாய்:Daerah Yan; ஆங்கிலம்:Yan District; சீனம்:铅县) மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும்.

விரைவான உண்மைகள் யான் மாவட்டம், நாடு ...

இந்த மாவட்டத்தின் வடக்கே கோத்தா ஸ்டார் மாவட்டம், வடகிழக்கில் பெண்டாங் மாவட்டம் மற்றும் தெற்கே கோலா மூடா மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளன.

யான் மாவட்டம் மலாக்கா நீரிணையின் கடற்கரைப் பகுதியில் உள்ளது. இது கெடாவின் மிகச் சிறிய மாவட்டம் ஆகும். "யான் பெசார்" என்பது யான் மாவட்டத்தின் நிர்வாக நகரமாகும். காவல் நிலையங்கள், மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மாவட்ட அலுவலகம் மற்றும் நில அலுவலகம் போன்ற நிர்வாக வசதிகளைக் கொண்டது.

Remove ads

பொது

இந்த மாவட்டத்தில் சில இயற்கை நீர்வீழ்ச்சிகள் உள்ளன. செரி பெரிகி (Seri Perigi),[3] தாங்கா கெனாரி (Tangga Kenari), தித்தி அயூன் (Titi Hayun),[4] பத்து அம்பார் (Batu Hampar),[5] புத்தரி மண்டி (Puteri Mandi)[6] எனும் நீர்வீழ்ச்சிகள். ஜெராய் மலையில் இருந்து இந்த நீர்வீழ்ச்சிகள் அருவி எடுத்து வருகின்றன.

கெடாவில் மிக உயரமான சிகரம் கொண்ட ஜெராய் மலை இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. 1242 மீட்டர்கள் (3,235 அடி) உயரம் கொண்டது. ஜெராய் மலையின் உச்சிக்கு தித்தி அயூன் நீர்வீழ்ச்சியின் வழியாகப் படிக்கட்டுகளின் மூலம் ஏறிச் செல்லலாம்.

Remove ads

வரலாறு

கெடா மாநிலத்தின் தென்பகுதியை மூடா ஆறு (Sungai Muda) இரண்டாகப் பிரித்துச் செல்கிறது. இந்தச் மூடா ஆற்றின் பெயரில் இருந்து தான் கோலா மூடா எனும் பெயர் வந்தது.[7] இந்தச் மூடா ஆறு, மலாக்கா நீரிணையில் கலக்கும் இடத்தில் கம்போங் சுங்கை மூடா, கோத்தா கோலா மூடா எனும் மீன்பிடி கிராமங்கள் உள்ளன.

மூடா ஆறு, மெர்போக் ஆறு (Sungai Merbok), சுங்கை மாஸ் (Sungai Mas) போன்ற ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் தான் மலாயாவின் பண்டைய கால நாகரிகங்கள் தோன்றி இருக்கலாம் எனும் கருத்து நிலவி வருகிறது

Remove ads

நிர்வாகப் பிரிவுகள்

யான் மாவட்டம் 5 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.[8]

  • துலாங் (Dulang)
  • சாலா பெசார் (Sala Besar)
  • சிங்கீர் (Singkir)
  • சுங்கை டவுன் (Sungai Daun)
  • யான் (Yan)

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads