யாழ்ப்பாணம் கிங்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யாழ்ப்பாணம் ஸ்டாலியன்சு (Jaffna Stallions, ஜப்னா ஸ்டாலியன்ஸ், சிங்களம்: යාපනය ස්ටැලියන්ස්) என்பது இலங்கையில் லங்கா பிரிமியர் லீக் (LPL) போட்டிகளில் விளையாடும் ஒரு துடுப்பாட்ட அணி ஆகும். இவ்வணி ஐக்கிய ராச்சியம், ஆத்திரேலியா, பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் வாழும் சில புலம்பெயர் தமிழர்களால் கூட்டாக நிர்வகிக்கப்படுகிறது.[2] ஆர்னல்டு ஆனந்தன், மற்றும் மைக்கிரோசாப்ட் வென்சர்சு (எம்12) நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் சூட் ஆகியோர் இதன் இணை உரிமையாளர்களாக உள்ளனர்.[3] சாரங்க விஜயரத்தின இலங்கைக்கான தகவல், ஊடகப் பணிப்பாளராக உள்ளார்.[4] இவ்வணியின் முகாமையாளராக ஹரி வாகீசன் உள்ளார்.
இலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட அணித் தலைவர் திலின கந்தம்பே இவ்வணியின் பயிற்சியாளராக உள்ளார்.[5] திசாரா பெரேரா இவ்வணியின் முத்திரை வீரராக விளையாடுகிறார்.[6]
லங்கா பிரிமியர் லீக் போட்டிகளின் முதலாவது வாகையாளர் கிண்ணத்தை யாழ்ப்பாணம் இசுடாலியன்சு அணி வென்றது. 2020 திசம்பர் 16 இல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் காலி கிளேடியேட்டர்சு அணியை 53 ஓட்டங்களால் வென்று தனது முதலாவது வெற்றிக் கிண்ணத்தை பெற்றது.[7][8]
Remove ads
பருவங்கள்
2020 அணி
- பன்னாட்டு அணி வீரர்கள் தடித்த எழுத்துகளில் தரப்பட்டுள்ளனர்.
- * - பருவத்தின் கடைசிக் காலத்தில் விளையாட மாட்டார்கள்
மூலம்: இலங்கை துடுப்பாட்ட வாரியம், 2020[9]
Remove ads
நிருவாகிகளும், ஊழியர்களும்
சிறப்புகள்
லீக்
- லங்கா பிரிமியர் லீக்
- வெற்றியாளர்கள் (1; record): 2020
தரவுகள்
பருவம் வாரியாக
இற்றைப்படுத்தியது: 18 திசம்பர் 2020
- மூலம் :ESPNcricinfo[10]
எதிரணிகள் வாரியாக
இற்றைப்படுத்தியது: 18 திசம்பர் 2020
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads