யுபிக் மக்கள்

From Wikipedia, the free encyclopedia

யுபிக் மக்கள்
Remove ads

யுபிக் மக்கள் (Yupik) வட துருவப்பகுதியில், ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியின் மேற்கிலும், தென்மேற்கிலும், தென்மத்தியிலும் மற்றும் ருசியாவின் தூரக் கிழக்கின் சைபீரியா பகுதிகளில் வாழும் ஒரு பண்டைய பழங்குடி இனக்குழுவினர் ஆவார். இவர்களை மேற்கு எஸ்கிமோக்கள் என்றும் அழைப்பர். [1]யுபிக் மக்கள், எஸ்கிமோ மற்றும் இனுவிட்டு மக்களுடன் தொடர்புடையவர்கள்.


விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
Thumb
மத்திய அலாஸ்காவின் ஹூப்பர் வளைகுடா இளைஞன், 1930
Thumb
முகமூடி அணிந்த யுபிக் மனிதன்
Thumb
கடல் சிங்கத்தின் தந்தத்தை தூக்கி பிடிக்கும் சைபீரியன் யுபிக் பெண்
Remove ads

மக்கள் தொகையியல்

ஐக்கிய அமெரிக்காவின் 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அமெரிக்க யுபிக் மக்கள் தொகை 24,000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.[2] ருசியாவின் சைபீரியப் பகுதியின் யுபிக் மக்கள் தொகை 1,700 ஆக கணக்கிடப்பட்டுள்ளது.[3] யுபிக் மக்கள் யுபிக் மொழி, ஆங்கிலம் மற்றும் ருசிய மொழி பேசுகின்றனர்.

பண்பாடு

Thumb
யுபிக் தாயும் சேயும், ஆண்டு 1930
Thumb
யுபிக் மனிதனின் முகமூடி

கோடைக்காலத்திலும், வசந்த காலத்திலும் வட துருவப் பகுதிகளில் கடல் சிங்கம் மற்றும் சாலமன் மீன்களை வேட்டையாடி உண்ணும் யுபிக் மக்கள், குளிர் காலத்தில் ஆண்களும், பெண்களும் கூட்டமாக தனித்தனி குடியிருப்புகளில் வாழ்கின்றனர்.

குளிர்காலத்தில் சிறுவர்களுக்கு வேட்டைப் பயிற்சி, வேட்டை கருவிகளை கையாளுதல் வலை பின்னுதல், தோலாடை தயாரித்தல் போன்ற பயிற்சிகளும்; சிறுமிகளுக்கும் சமைத்தல், வலைபின்னுதல், தைத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

மேலும் குளிர்காலத்தில் முகமூடி அணிந்து நடனம் ஆடுதல், கதை சொல்லுதல் மற்றும் தங்களுக்கான பண்டிகைகள் மற்றும் விழாக்கள் எடுக்கின்றனர்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேல் வாசிப்பிற்கு

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads