யூக்கா குளோரியோசா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யூக்கா குளோரியோசா (தாவரவியல் பெயர்: Yucca gloriosa) என்பது அசுபராகேசியேக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 121 பேரினங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “யூக்கா” பேரினத்தில், 52 இனங்கள் அறிவிக்கப்பட்ட இனங்களாகும். அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1753 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.[1] இத்தாவரயினத்தின் இயற்கை வாழ்விடம் என்பது தென்கிழக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகும். இத்தாவரம் 2.5 m (8 அடி) உயரம் வரை வளரும் இயல்புடையது. மேலும், இது மாறாப் பசுமை புதர் தாவரமாகும். இது தோட்டவியலாளர்களின் ஈர்ப்பைப் பெற்றதால் பரவலாக வளர்க்கப்படுகிறது. உலகின் மிதவெப்பமுள்ள பகுதிகளில் இதன் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.[2]
Remove ads
மேற்கோள்கள்
இதையும் காணவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads