யூதேயா (உரோமை மாகாணம்)
உரோமைப் பேரரசின் மாகாணம் (பொ. ஊ. 6 - 135) From Wikipedia, the free encyclopedia
Remove ads
யூதேயா (பண்டைக் கிரேக்கம்: Ἰουδαία) என்பது பொ. ஊ. 6 முதல் 132 வரை அமைந்திருந்த ஓர் உரோமை மாகாணம் ஆகும். லெவண்ட் பகுதிகளான யூதேயா, சமாரியா மற்றும் இதுமேயா ஆகிய பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. யூதேயாவின் மக்கபேயர் அரசு மற்றும் எரோதிய இராச்சியம் ஆகியவற்றின் முந்தைய பகுதிகளின் மேல் இது பரவியிருந்தது. இம்மாகாணம் இரும்புக் காலம் யூத அரசிலிருந்து இதன் பெயரைப் பெற்றுள்ளது.
பொ. ஊ. மு. 63ஆம் ஆண்டில் உரோமைக் குடியரசு யூதேயாவைக் கைப்பற்றியதிலிருந்து பகுதியளவு தன்னாட்சியுடைய திறை செலுத்தும் ஓர் அமைப்பை உரோமைக் குடியரசானது யூதேயாவில் பேணி வந்தது. இந்த உரோமை மாகாணம் இணைத்துக் கொள்ளப்பட்டதானது முதலாம் உரோமைப் பேரரசர் அகத்தசுவுக்குக் கீழ் நடத்தப்பட்டது. எரோது ஆர்கீலசுவின் (பொ. ஊ. மு. 4 - பொ. ஊ. 6) மோசமான ஆட்சிக்கு எதிராக மக்கள் கோரிக்கை வைத்ததற்குப் பிறகு இவ்வாறு இணைக்கப்பட்டது. நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன் உரோமை சிரியாவின் ஆளுநரான பப்லியசு சுல்பிசியசு குயிரினியசால் தொடங்கப்பட்ட அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பானது பிரச்சினைகளுக்குக் காரணமானது. யூத எதிர்ப்பாளரான கலிலேயாவின் யூதாசுவின் (பொ. ஊ. 6) கிளர்ச்சிக்கு இட்டுச் சென்றது. அண். 30–33 பொ. ஊ.இல் இயேசு சிலுவையில் அறையப்பட்டது (இது கிறிஸ்தவத்தின்தோற்றத்திற்கு வழி வகுத்தது) மற்றும் 37இல் யூத கோயிலில் தனக்குத் தானே ஒரு சிலையை எழுப்ப பேரரசன் காலிகுலா ஆணையிட்டது போன்றவை இந்தப் பகுதியில் நடைபெற்ற பிற குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஆகும்.
உரோமை ஆட்சிக்கு எதிராக வளர்ந்து வந்த அதிருப்தியானது பொ. ஊ. 66 - 73இல் முதலாம் யூத-உரோமைப் போருக்கு வழி வகுத்தது. இறுதியாக எருசேலம் முற்றுகையிடப்பட்டது. பொ. ஊ. 70இல் யூதர்களின் இரண்டாம் கோயில் அழிக்கப்பட்டது.[1] இரண்டாம் கோயில் காலத்திற்கு முடிவை இது கொண்டு வந்தது. பொ. ஊ. 44இல் கலிலேயா மற்றும் பெரியா ஆகியவை இம்மாகாணத்துடன் இணைக்கப்பட்டன.[சான்று தேவை] பொ. ஊ. 132இல் கலிலேயா மற்றும் யூதேயா ஆகியவை இணைக்கப்பட்டது சிரியா பாலத்தீனா என்ற பெயருடைய ஒரு பெரிதாக்கப்பட்ட மாகாணம் அமைவதற்கு வழி வகுத்தது என ஆதாரங்கள் கூறுகின்றன.[2][3][4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads