யோகான்னசு வான் டெர் வால்சு

From Wikipedia, the free encyclopedia

யோகான்னசு வான் டெர் வால்சு
Remove ads

யோகான்னசு வான் டெர் வால்சு (Johannes Diderik van der Waals; 23 நவம்பர் 1837 – 8 மார்ச் 1923) என்பவர் டச்சு கோட்பாட்டுவாத இயற்பியலாளரும், வெப்பவியக்கவியலாளரும், ஆவார். வளிமங்கள் மற்றும் நீர்மங்களின் நிலை சமன்பாடு பற்றிய இவரது ஆய்வுகள் புகழ் பெற்றவையாகும். இவருக்கு 1910 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

விரைவான உண்மைகள் யோகான்னசு வான் டெர் வால்சுJohannes van der Waals, பிறப்பு ...

இவரது பெயர் முக்கியமாக வளிமங்களின் நடத்தைகளைப் பற்றியும், அவற்றின் திரவ நிலை ஒடுக்கம்[1] பற்றியும் கூறும் வான் டெர் வால்சு நிலைச் சமன்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் நிலையான மூலக்கூறுகளுக்கிடையேயான வான் டெர் வால்ஸ் விசை உடனும்[2], இவ்விசைகளால் கட்டுப்பட்ட சிறிய மூலக்கூற்றுக் கொத்துகள் வான் டெர் வால்சு மூலக்கூறுகளுடனும், வான் டெர் வால்சு ஆரைகளுடனும் சம்பந்தப்பட்டுள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads