யோக உபநிடதங்கள்

யோகக்கலைப் பற்றிய இந்து சமய உரை From Wikipedia, the free encyclopedia

Remove ads

யோக உபநிடதங்கள் ( Yoga Upanishads ) என்பது யோகக் கலை தொடர்பாக சமசுகிருதத்தில் எழுதப்பட்ட இந்து சமயத்தின் சிறிய உபநிடதங்களின் ஒரு தொகுப்பாகும். இராமனால் அனுமனுக்கு உபதேசிக்கப்பட்ட முக்திகா நியதியின் தொகுப்பில் பட்டியலிடப்பட்டுள்ள 108 உபநிடதங்களின் தொகுப்பில் இருபது யோக உபநிடதங்கள் உள்ளன.[1][2][2] யோக உபநிடதங்கள், மற்ற சிறிய உபநிடதங்களுடன், பொதுவாக மிகவும் பழமையானதாகவும் வேத மரபிலிருந்து வந்ததாகவும் கருதப்படுகிறது. மிகவும் பழமையானவை என்று கருதப்படும் பதின்மூன்று முக்கிய முதன்மை உபநிடதங்களிலிருந்து தனித்தனியாக வகைப்படுத்தப்படுகின்றன.{Sfn|Mahony|1998|p=271}}

யோக உபநிடதங்கள் யோகக் கலை உத்திகளின் முறைமை மற்றும் தியானத்தில் பல்வேறு முக்கியத்துவத்துடன், ஆனால் சில பகிரப்பட்ட யோசனைகளுடன் கோட்பாடு மற்றும் பயிற்சியைக் கையாள்கின்றன.[2] பொதுவான இயல்புடைய சாமான்ய உபநிடதங்கள், இந்து சமயத் துறவு மற்றும் துறவற நடைமுறையில் கவனம் செலுத்தும் சந்நியாச உபநிடதங்கள், சைவத்தின் அம்சங்களை முன்னிலைப்படுத்தும் சைவ உபநிடதங்கள், வைணவத்தை சிறப்பிக்கும் வைணவ உபநிடதங்கள் போன்ற சிறிய உபநிடதங்களின் பிற குழுக்களிலிருந்து அவை வேறுபடுகின்றன. மேலும் சாக்த உபநிடதங்கள் சக்தி (சாக்தம்) உயர்த்திக் காட்டுகின்றன.[3] [4]

Remove ads

காலவரிசை

ஒவ்வொரு யோக உபநிடதங்களின் தேதியும் தெளிவாக இல்லை. மேலும் அவை எப்போது இயற்றப்பட்டன என்பது குறித்த மதிப்பீடுகளும் அறிஞர்களிடையே வேறுபடுகின்றன. மகோனியின் கூற்றுப்படி, அவை கிமு 100 முதல் கிபி 1100 வரை தேதியிடப்பட்டிருக்கலாம். [5] இருப்பினும், கவின் பிளட் யோக உபநிடதங்கள் கிமு 100 முதல் கிபி 300 வரை காலக்கெடுவைக் குறிப்பிடுகிறார். [6] ஜேம்ஸ் மல்லின்சனின் கூற்றுப்படி, சில யோக உபநிடதங்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் நாத சைவப் பாரம்பரியத்தின் ஹத யோகக் கருத்துக்களை இணைக்க திருத்தப்பட்டன. [7]

தொன்மையான மொழி, பிற இந்திய நூல்களில் உள்ள சில யோக உபநிடதங்களின் குறிப்பு, பிற ஆரம்பகால யோக உபநிடதங்களான. பிரம்மபிந்து, பிரம்மவித்யா,யோகதத்துவம், நாதபிந்து, யோகசிகம், சூரிகா மற்றும் அமிர்தபிந்து, மகாபாரதத்தின் உபதேசப் பகுதிகள் மற்றும் தலைமை சந்நியாச உபநிடதங்கள் போன்றவைகள் எழுதப்பட்ட அதே காலகட்டத்தில் இதுவும் இயற்றப்பட்டிருக்கலாம் என்று உரோமானிய வரலாற்றாளர் மிர்சியா எலியாட் கூறுகிறார். அதே நேரத்தில் [[மைத்ராயனிய உபநிடதம்] ), சூரிகா, அமிர்தபிந்து உபநிடதம், பிரம்மவித்யா, தேஜோபிந்து உபநிடதம், நாதபிந்து, யோகசிக உபநிடதம், தியானபிந்து உபநிடதம் மற்றும் [[யோகதத்துவ உபநிடதம். [8] எலியாட்டின் பரிந்துரைகள் இவற்றை இறுதி கிமு நூற்றாண்டுகள் அல்லது கிபியின் ஆரம்ப நூற்றாண்டுகளில் வைக்கின்றன. இவை அனைத்தும், யோக-குண்டலினி, வராகா மற்றும் பசுபதபிரம்ம உபநிடதங்கள் போன்ற பத்து அல்லது பதினோரு யோக உபநிடதங்களை விட முன்னதாகவே இயற்றப்பட்டிருக்கலாம் என்று எலியாட் கூறுகிறார். [8]

Remove ads

வாய்ப்பு

யோக உபநிடதங்கள், தோரணைகள், மூச்சுப் பயிற்சிகள், தியானம் , ஒலி, தந்திரம் ( குண்டலினி உடற்கூறியல்) மற்றும் பிறவற்றிலிருந்து பல்வேறு அம்சங்களையும் யோகக் கலையின் வகைகளையும் விவாதிக்கின்றன. [6] இவற்றில் சில தலைப்புகள் பகவத் கீதை அல்லது பதஞ்சலியின் யோக சூத்திரங்களில் குறிப்பிடப்படவில்லை. [9]

பல நூல்கள் யோகாவை படிகள் அல்லது அங்கங்கள் கொண்டதாக விவரிக்கின்றன. மேலும், ஜெர்மானிய இந்தியவியலாளர் பால் டியூசனின் கூற்றுப்படி, பிரம்மவித்யா, சூரிகா, குலிகா ( சாமான்ய உபநிடதங்களின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது ), நாதபிந்து, பிரம்மபிந்து, அமிர்தபிந்து, தியானபிந்து, தேஜோபிந்து, யோகசிகா, யோகதத்துவா, மற்றும் ஹம்சா ஆகியன இவைகளில் முக்கியமான யோக உபநிடதங்கள் ஆகும்.[10] இந்த 11 யோக உபநிடதங்கள் வேதாந்தக் கண்ணோட்டத்தில் வேதப் பள்ளியைச் சேர்ந்தவை. நெறிமுறைகள் பற்றிய விவாதம் [ இயமம், ( அகிம்சை போன்ற சுய கட்டுப்பாடுகள் ) மற்றும் நியமம், ( படிப்பு போன்ற சுய முயற்சி ) ], யோகாசனம் (உடல் பயிற்சிகள் மற்றும் உடல் தோரணை), பிராணயாமா (மூச்சு பயிற்சிகள்), பிரத்யாகரம் (புலன்களை விலக்குதல்), தாரணா (மனதின் செறிவு), தியானம் மற்றும் சமாதி ( தியானம்-உணர்வு நிலை) ஆகியவை அடங்கும்). [10] [11]

Remove ads

20 யோகா உபநிடதங்களின் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் தலைப்பு, முக்திகா தொடர் # ...

இதனையும் பார்க்கவும்

சான்றுகள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads