ரகுநாத் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரகுநாத் கோயில் (Raghunath Temple) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் ஏழு சன்னதிகள் கொண்டது. ஏழு சன்னதிகளுக்கும் தனித்தனி கோபுர விமானங்கள் உள்ளது.
இக்கோயில் மூலவர் இராமராக இருப்பினும், சீதை, விஷ்ணு, கிருஷ்ணர், அனுமார், சிவன், பிரம்மா, துர்கை, பார்வதி ஆகிய தெய்வங்களுக்கும் சன்னதிகள் உண்டு.
இக்கோயில் கட்டும் பணி, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மகாராஜா குலாப் சிங்கால் 1835-இல் துவக்கப்பட்டு, அவரது மகன் மகாராஜா ரண்பீர் சிங் என்பவரால், 1860-இல் கட்டிமுடிக்கப்பட்டது.
லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் இரகுநாத் கோயிலில் புகுந்து துப்பாக்கியால் சுட்டதிலும், எறிகுண்டுகளை வீசித் தாக்கியதிலும், பக்தர்கள் பலர் உயிரிழந்தனர்.
Remove ads
அமைவிடம்
இரகுநாத் கோயில் ஜம்மு நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள பெரிய கோயில்களில் ஒன்றாகும்.
ரகுநாத் கோயில் தாக்குதல்கள்
இக்கோயிலை 30 மார்ச் 2002இல் பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதிகள் துப்பாக்கிகளாலும், குண்டு வீச்சாலும் தாக்கியதில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் உட்பட பத்து பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.[1] இரகுநாத் கோயில் மீதான இரண்டாம் தாக்குதலை நவம்பர் 24, 2002இல் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் மேற்கொண்டனர். தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதிலும், குண்டுகளை வீசியதாலும், 13 பக்தர்கள் இறந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.[2][3][4]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஆதார நூற்பட்டியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads