ரங்கநாத் ராமச்சந்திர திவாகர்

இந்திய எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

ரங்கநாத் ராமச்சந்திர திவாகர்
Remove ads

ரங்கநாத் ராமச்சந்திர திவாகர் (Ranganath Ramachandra Diwakar) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதியாவார். இவர் வாழ்ந்த காலம் 1894 செப்டம்பர் 30 முதல் 1990 சனவரி 15 வரையுள்ள காலமாகும்.[1][2]. ஆர். ஆர். திவாகர் என்று சுருக்கமான பெயரால் இவர் அழைக்கப்படுகிறார்.

விரைவான உண்மைகள் ரங்கநாத் ராமச்சந்திர திவாகர்R. R. Diwakar, பீகார் ஆளுநர்களின் பட்டியல் ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

திவாகர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார். 1930 ஆம் ஆண்டு முதல் 1942 ஆம் ஆண்டு வரை கர்நாடக பிரதேச காங்கிரசு கமிட்டியின் தலைவராகப் பணியாற்றினார். இந்திய அரசியல் நிர்ணய சபை மற்றும் தற்காலிக நாடாளுமன்றத்தில் உறுப்பினரானராகவும் இருந்தார். 1949 ஆம் ஆண்டு முதல் 1952 ஆம் ஆண்டு வரை முதல் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக இருந்தார். 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 அன்று பம்பாய் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக திவாகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] ஆனால் 13 ஜூன் 1952 ஆம் ஆண்டு சூன் மாதம் 13 அன்றே பதவி விலகினார். அடுத்த ஐந்து மாதங்களுக்குள் திவாகர் பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1957 ஆம் ஆண்டு வரை பீகார் ஆளுநராகப் பணியாற்றினார். 1962 ஆம் ஆண்டில் இவர் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டு 1968 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். திவாகர் இறந்தபோது நேருவின் முதல் அமைச்சரவையில் எஞ்சியிருந்த கடைசி உறுப்பினர் ஆக இருந்தார்.[3]

திவாகர் ஒரு காந்தியவாதியாக இருந்தார். காந்திய கருத்துக்களுக்கு அதிக அக்கறை கொண்டவர் என்றும் வர்ணிக்கப்படுகிறார்.[4]

ரங்கநாத் ராமச்சந்திர திவாகர் ஆங்கிலம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.[5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads