ராகினி
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராகினி (1937-1976), தென்னிந்திய நடிகை, பரதக் கலைஞர். திருவிதாங்கூர் சகோதரிகளில் (லலிதா,பத்மினி) ராகினி இளையவர்.[1] 1950-களில் இவர் தம் திரைப்பயணத்தைத் தொடங்கினார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் தம் முத்திரையைப் பதித்தார். தென்னிந்திய நடிகையாக இருந்த போதிலும் மலையாளத்திலும் இந்தித் திரைப்படங்களிலும் அதிகம் நடித்துள்ளார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்புகள்
இவர் திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்தார். இவரது பெற்றோர் தங்கப்பன், சரஸ்வதி ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இரண்டாமவர் பத்மினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவிதாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். மூவரும் பரதக்கலையை குரு.கோபிநாத், குரு.மகாலிங்கம் பிள்ளை ஆகியோரிடம் கற்று நன்கு தேர்ச்சி பெற்றனர். இவர்களது சகோதரர் சந்திரசேகர் என்பவராவார். ராகினி, மாதவன் தம்பி என்பாரை மணந்து கொண்டார். இவர்களுக்கு லட்சுமி, பிரியா என இரு மகள்கள் இருந்தனர்.[2]
Remove ads
திரைப்பயணம்
இந்தி மொழியில் நாட்டியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திய பெருமை ராகினி உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகளையே சாரும்.[3]
இவர் நடித்த திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
- வீர பாண்டிய கட்டபொம்மன் (1959)
- தூக்கு தூக்கி (1954)
மலையாளத் திரைப்படங்கள்
- ஆலிங்கனம்(1976)......(கதாபத்திரம்:விமலா)
- லக்ஷ்யம்(1972)
- அரோமலுன்னி(1972)
- நடன் பிரேமம்(1972)
- எர்ணாகுளம் ஜங்க்ஷன்(1971).....(கதாபாத்திரம்:மாலதி)
- லங்கா தகனம்(1971) .... (கதாபாத்திரம்:மகேஸ்வரி)
- பஞ்சவடி காடு(1971)
- பூம்பட்டா(1971).... (கதாபத்திரம்:சுசீலா)
- முத்தச்சி(1971)
- கங்கை சங்கமம்(1971)
- அச்சன்டே பார்யா(1971) .... (கதாபத்திரம்:தங்கம்மா)
- அரநாழிகநேரம்.... (கதாபத்திரம்:தீனம்மா)
- துறக்காத வாதில் (1970).... (கதாபத்திரம்:சுலேகா)
- ஒதேனன்றே மகன் (1970)
- சபரிமலை சிறீ தர்ம சாஸ்தா (1970)
- மணவாட்டி(1964)
- ஸ்கூல் மாஸ்டர்(1964)..... (கதாபத்திரம்: சரளா)
- அண்ணா(1964)
- ஆட்டம் பாம் (1964)
- காளையும் காமினியும்(1963)
- சிலம்பொலி (1963)
- நித்ய கன்யகா (1963)
- பார்யா (1962)
- வியார்ப்பின்டே விலா (1962)
- கால்படுகல் (1962)
- விதி தன்ன விளக்கு (1962)
- வேலுதம்பி தலாவா (1962)
- பாலாட்டு கோமன் (1962)
- புதிய ஆகாசம் புதிய பூமி (1962) ..... (கதாபத்திரம்: பொன்னம்மா)
- உண்ணியர்ச்சா (1961)
- உம்மினி தன்கா(1961) .... (கதாபத்திரம்: ஆனந்தம்)
- கிருஷ்ண குசேலா(1961)
- நாயரு பிடிச்ச புலிவால்(1958).... (கதாபத்திரம்: தங்கம்)
- தச்கரா வீரன் (1957)
- பிரசன்னா (1950)
இந்தித் திரைப்படங்கள்
- ஜெய் ஜகத் ஜனனி (1976)
- ஆதி ராத் கே பாத் (1965)
- யே தில் கிஸ்கோ தூன் (1963)
- கஹரா தாக் (1963)
- நாக் ராணி (1963)
- சிகாரி (1963)
- ஆய் பிர்சே பாஹர் (1960)
- கல்பனா (1960)
- அமர சாஹீத் (1959)
- அமர தீப் (1958)
- முஜ்றிம் (1958)
- ஸிதாங்கர் (1958)
- மிஸ்டர் எக்ஸ் (1957)
- பாயல் (1957)
- ஃகைதி (1957)
Remove ads
இறப்பு
திசம்பர் 30, 1976ஆம் ஆண்டு புற்றுநோயால் காலமானார்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads