ராசாத்தி அம்மாள்
மு. கருணாநிதியின் மூன்றாவது மனைவி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஜாத்தி அம்மாள் அல்லது தர்மாம்பாள் தமிழ்நாட்டின் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் சிவபாக்கியம் அம்மாள் - முத்துகுமாரசாமி தம்பதியர்க்கு பிறந்த கடைசி மகள் ஆவார்.[1]
இளமை வாழ்க்கை
இவரின் தந்தை இறந்து விட, 1962 முதல் சென்னை, மைலாப்பூரில் தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் குடியேறி, நாடகங்களில் நடிப்பதை தன் தொழிலாக மேற்கொண்டார் இராஜாத்தி அம்மாள். கண்ணதாசன் தயாரித்த கறுப்புப்பணம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார்.[2]
1966இல் “காகிதப்பூ“ மற்றும் பல நாடகங்களில் இராஜாத்தி அம்மாளும், மு.கருணாநிதியும் ஒன்றாக இணைந்து நடித்ததின் விளைவாக இருவருக்கிடையே காதல் ஏற்பட்டது. 1966இல் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி இருவரும் இரகசியத் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணம் மு. கருணாநிதியின் மூன்றாம் திருமணம் ஆகும்.
மு. கருணாநிதிக்கும் - இராஜாத்தி அம்மாளுக்கும், 1968ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் நாளில் கனிமொழி பிறந்தார்.[3]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads