ராஜசேகர் (நடிகர்)

தமிழ் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ராஜசேகர் (19 ஆகத்து 1957 – 8 செப்டெம்பர் 2019) ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும், திரைப்பட, சின்னத்திரை நடிகரும் ஆவார். அத்துடன் திரைக்கதை எழுத்தாளராகவும், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2]

விரைவான உண்மைகள் ராஜசேகர், இறப்பு ...

ஒளிப்பதிவாளர்

ராஜசேகர் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து ஒளிப்பதிவு பயிற்சி பெற்றார். உடன் பயின்ற இராபர்ட் ஆசீர்வாதம் என்பவருடன் இணைந்து ஜெயபாரதியின் இயக்கத்தில் 1979 இல் வெளிவந்த குடிசை திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார்.

இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்த திரைப்படங்கள்:

இயக்குநர்

பின்னர் இராபர்ட்டுடன் இணைந்து சுஹாசினி நடிப்பில் 1981 இல் வெளிவந்த பாலைவனச்சோலை திரைப்படத்தை இயக்கினார். இப்படம் பெரும் வெற்றியளித்தது.[1][2]

இருவரும் இணைந்து இயக்கிய திரைப்படங்கள்:

திரைக்கதை எழுத்தாளர்

நடிகர்

சின்னத்திரை நடிகர்

  • சரவணன் மீனாட்சி
  • தென்றல்

தனிப்பட்ட வாழ்க்கை

மனசுக்குள் மத்தாப்பூ படத்தில் டாக்டர் கீதா என்ற பாத்திரத்தில் நடித்த சரண்யாவை மணந்துகொண்டார். அந்த மணவாழ்வு நீடிக்காமல் மணமுறிவு ஏற்பட்டது. பின்னர் தாரா என்பவரை மணந்து தன் இறுதி காலம்வரை அவருடன் வாழ்ந்தார்.[3] சில நாட்களாக உடல் நலக் குறைபாட்டால், சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் 2019 செப்டம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.[1][2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads