பக்த மார்க்கண்டேயா

பி. எஸ். இரங்கா இயக்கத்தில் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பக்த மார்க்கண்டேயா (Bhaktha Markandeya) 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகைய்யா, கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தில் வேறுபட்ட நடிகர்களுடன் படமாக்கப்பட்டது. இரண்டு படங்களிலும் மாஸ்டர் ஆனந்த் மார்கண்டேயனாக நடித்தார். இப்படம் 1957 இல் வெளியானது.[1][2]

விரைவான உண்மைகள் பக்த மார்க்கண்டேயா, இயக்கம் ...
Remove ads

கதை

குழந்தை இல்லாத மிருகண்ட மகரிசிக்கு குழந்தை பிக்கியம் கொடுக்கிறார் சிவபெருமான். ஆனால் புத்திசாலியான அவர்களின் பிள்ளையான மார்க்கண்டேயாவுக்கு 16 ஆண்டுகள் மட்டுமே ஆயுள் என்று கூறுகிறார். மார்கண்டேயன் சிவனை வரம்பற்ற பக்தியுடன் வணங்குவனாக உள்ளான். மார்கண்டேயனின் 16 வயதுக்குப் பிறகு தங்களுடன் அவன் இருக்கமாட்டானே என்ற கவலை அவர்களை ஆட்கொள்கிறது. அவர்கள் அஞ்சிய படியே மார்கண்டேயனின் 16 வது வயதின்போது, யமன் அவனது உயிரைப் பறிக்க வருகிறான். மார்க்கண்டேயனோ சிவலிங்கத்ததைப் பிடித்துக் கொண்டு சிவனை தஞ்சம் அடைகிறான். யமன் பாசக் கயிறை வீசும்போது சிவன் அங்கு தோன்றி, மார்க்கண்டேயனின் உயிரை எடுக்க வேண்டாம் என்று அவனிடம் கூறுகிறி தன் பக்தனை மீட்கிறார். சிவனின் வரத்தால் மார்கண்டேயன் சிரஞ்சீவியாகிறான். கடவுளிடம் சரணடைவவர் மரணத்தைப் பற்றி கவலைப்பட தேவையில்லை என்கிறது கதை.

Remove ads

நடிப்பு

தமிழ்ப் பதிப்பு

கன்னடப் பதிப்பு

Remove ads

படக்குழுவினர்

தயாரிப்பாளர் (ம)
இயக்குநர்: பி. எஸ். இரங்கா
உரையாடல்: துறையூர் மூர்த்தி (தமிழ்) சி சதாசிவியா (கன்னடம்)
படத்தொகுப்பு: பி. ஜி. மோகன், எம். தேவேந்திரநாதன்
நடன அமைப்பு: Chopra
ஒளிப்பதிவு: ஆர். வேகடாச்சரி
படப்பிடிப்பு வளாகம்: விக்ரம்[1][2]

பாடல்

தமிழ்ப் பதிப்பில்

இப்படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்தனர். பாடல் வரிகளை அ. மருதகாசி எழுதினார்.[2] பாடல்களை வி. நாகையா, பின்னணிப் பாடகர்களான வி. என். சுந்தரம், பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். சி. கிருஷ்ணன், சிவராமன், பி. லீலா, ஏ. பி. கோமளா, கே. ஜமுனா ராணி, டி. சத்யவதி, சூலமங்கலம் இராஜேஸ்வரி, பி. சுசீலா, ஆர். பாலசரஸ்வதி ஆகியோர் பாடியுள்ளனர்.[4]

மேலதிகத் தகவல்கள் எண்., பாடல் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads