ரிச்சர்டு கெக்
அமெரிக்க வேதியியலாளர் (1931-2015) From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரிச்சர்டு எஃப். ஃகெக் (Richard F. Heck, ஆகத்து 15, 1931 – அக்டோபர் 10, 2015)[3] ஓர் அமெரிக்க வேதியியல் அறிஞர். இவர் பெயரால் வழங்கும் பலேடியம்-வினையூக்கி இணைந்து நிகழும் ஃகெக் விளைவு புகழ்பெற்றது. இவர் 2010 ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசை ஐ-இச்சி நெகிழ்சி (Ei-ichi Negishi), அக்கிரா சுசுக்கி (Akira Suzuki) என்னும் இரண்டு நிப்பானிய (சப்பானிய) வேதியியலாளர்களுடன் சேர்ந்து பெற்றுள்ளார்.[4] 1971 முதல் 1989 வரை ரிச்சர்டு ஃகெக், ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே உள்ள டெலவேர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றார்.
Remove ads
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads