வட ஆசியப் பகுதிகளில் காணப்படும் ஒரு பறவை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரிச்சர்டு நெட்டைக்காலி (Richard's pipit - ஆந்தசு ரிச்சர்டி) என்பது ஒரு நடுத்தர அளவுள்ள, (மரத்தை) அடையும் பாசரீன் வகைப் பறவை ஆகும். இவை வட ஆசியப்பகுதிகளின் திறந்த புல்வெளிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை இங்கிருந்து இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியப்பகுதிகளுக்கு நீண்ட தூரம் வலசை போகின்றன.[2][3]
விரைவான உண்மைகள் ரிச்சர்டு நெட்டைக்காலி, காப்பு நிலை ...
நெட்டைக்காலிகளில் பெரியவை இவை. இவற்றின் உடல் நீளம் 17 முதல் 20 செ. மீ. நீளமும் எடை 25 முதல் 36 கிராம் வரை இருக்கும். பெரும்பாலும் நிமிர்ந்து நிற்கும் வழக்கமுடைய மெல்லிய பறவை இந்த பறவை, தொந்தரவு செய்யப்படும் போது இறக்கைகளை ஆழமாக அடித்து எழும்பி, அதிக உயரத்துக்குச் செல்லும் தன்மையுடையன.
உடல் தோற்றம்
நீண்ட, மஞ்சள் பழுப்பு நிறக் கால்கள், தெளிவான புருவக்கோடு (குறிப்பாக, கண்ணிற்குப் பின்புறம்), பூங்குருவியைப் போன்ற தோற்றம்;
நன்றான கோடுகளுடைய மேல் பாகங்கள் மற்றும் மார்பு, நீளமான பருத்த அலகு