ரிச்சர்ட் ஆல்புரூக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரிச்சர்ட் சார்லசு ஆல்பர்ட் ஆல்புரூக் (Richard Charles Albert Holbrooke) (ஏப்ரல் 24, 1941 – திசம்பர் 13, 2010) அமெரிக்காவின் ஓர் தலைசிறந்த வெளியுறவு அதிகாரியும் இதழியல் ஆசிரியரும் நூலாசிரியரும் விரிவுரையாளரும் அமைதிப்படை அதிகாரியும் முதலீட்டாளரும் ஆவார். உலகின் இருவேறு பகுதிகளுக்கு வெளியுறவுத் துணைச்செயலராகப் பணியாற்றிய ஒரே அமெரிக்க அதிகாரி என்ற பெருமை இவருக்குண்டு. 1977ஆம் ஆண்டு முதல் 1981 வரை கிழக்காசிய மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான துணைச்செயலராகவும் 1994ஆம் ஆண்டு முதல் 1996 வரை ஐரோப்பிய மற்றும் கனடிய பகுதிகளுக்கான துணைச்செயலராகவும் பணியாற்றினார். தற்போதைய பராக் ஒபாமா அரசில் ஆப்கானித்தான்,பாக்கித்தான் நாடுகளுக்கானச் சிறப்புத் தூதராகப் பணியாற்றினார்.
1993ஆம் ஆண்டு முதல் 1994வரை செருமனிக்கான அமெரிக்கத்தூதராகப் பணியாற்றினார். இதற்கு முன்னரே வெளியுறவுத்துறையிலும் இதழியல் துறையிலும் பிரபலமடைந்திருந்த போதிலும் இந்தப் பணியில் இருந்தபோது இவரும் சுவீடனின் பிரதமர் கார்ல் பில்ட்டும் இணைந்து 1995ஆம் ஆண்டு போசுனியாவின் உள்நாட்டுப் போரில் இரு பிரிவினருக்கும் இடையே ஏற்படுத்திய டேடன் அமைதி உடன்பாட்டை அடுத்து உலகளவில் கவனிக்கப்பட்டார். இக்காலத்தில் இவர் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலராக நியமிக்கப்படுவார் என்று பெரிதும் ஊடகங்களில் எதிர்பார்க்கப்பட்டார்.1999ஆம் ஆண்டு முதல் 2001வரை ஐ.நா அவைக்கான அமெரிக்கத்தூதராக பணியாற்றினார்.
2008ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இலரி கிளின்டனின் முகாமில் இணைந்து வெளியுறவு ஆலோசகராக இருந்தார். இலரி வெற்றி பெற்றால் வெளியுறவுத்துறைச் செயலர் பதவிக்கு இவரே வருவார் என எண்ணப்பட்டது.
சனவரி 22, 2009 அன்று ஆல்புரூக் பாக்கித்தான் மற்றும் ஆப்கானித்தானிற்கான சிறப்பு அமெரிக்கத்தூதராக நியமிக்கப்பட்டார். கிழிபட்ட தமனி சிக்கலால் திசம்பர் 13, 2010 அன்று இறக்கும்வரை இப்பணியில் இருந்தார்.
Remove ads
எழுத்துக்கள்
- 1991: Clifford, Clark, with Richard Holbrooke. – Counsel to the President: A Memoir. – New York, New York: Random House. – பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780394569956.
- 1998: To End a War. – New York, New York: Random House. – பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780375500572.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads