ராவுர்கேலா

இந்தியா, ஒரிசாவிலுள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia

ராவுர்கேலாmap
Remove ads

ரூர்கேலா Rourkela (ஒரியா:ରାଉରକେଲା) (Hindi: राउरकेला) இந்திய மாநிலம் ஒரிசாவின் வடமேற்கு முனையில் கனிமவளம் மிகுந்த நிலப்பகுதியில் உள்ள ஓர் நகரமாகும். மாநிலத் தலைநகர் புவனேசுவரிலிருந்து 340 கிலோமீட்டர்கள் (211 mi) தொலைவில் சுந்தர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நகரைச் சுற்றியும் மலைகளும் ஆறுகளும் உள்ளன. இந்திய எஃகு நிறுவனத்தின் மிகப்பெரும் எஃகு ஆலைகளில் ஒன்று இங்கு நிறுவப்பட்டுள்ளது. இதனை ஒட்டியே ரூர்கேலாவின் பொருளாதாரம் அமைந்துள்ளது. இந்தியாவின் தூய்மையான மற்றும் பசுமையான நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு தேசிய தொழில்நுட்பக் கழகம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள்
Remove ads

பெயர்க்காரணம்

"ரூர்கேலா" என்பதில் உள்ள ரூர் இடாய்ச்சு மொழியிலிருந்து பெறப்பட்டது. இங்குள்ள எஃகு உருக்காலை செருமானிய உதவியுடன் நிறுவப்பட்டதால் அங்குள்ள தொழில்வளர்ச்சி மிக்கப் பகுதியான ரூர் பெருநகரை ஒட்டி எழுந்தது. மற்றும் கேலா என்பது உள்ளூர் மொழியான சத்ரியில் "சிற்றூர்" எனப் பொருள்படும்.[1]

மக்கள்தொகையியல்

2001 கணக்கெடுப்பின்படி, ரூர்கேலாவின் மக்கள்தொகை 224,601. ஆடவர் 54% உம் பெண்டிர் 46%உம் உள்ளனர். ரூர்கேலாவின் சராசரி படிப்பறிவு தேசிய சராசரியான 59.5%ஐ விடக் கூடுதலாக 75% ஆக உள்ளது. இது கல்வியறிவு மிக்க தொழிலாளர் மக்கள்தொகையால் ஏற்பட்டுள்ளது. ஆடவர் படிப்பறிவு 81% ஆகவும் மகளிர் படிப்பறிவு 69% ஆகவும் உள்ளது. மக்கள்தொகையில் 12% ஆறு வயதிற்கும் குறைவானவர்கள்.

  • மக்கள்தொகை அடர்த்தி - ச.கி.மீக்கு 2,500 ( ஏறத்தாழ).
  • பாலின விகிதம் - 1000 ஆடவருக்கு 835 பெண்கள்
  • தனிநபர் வருமானம் - ஒடிசாவில் மிக உயர்ந்தது
  • மக்கள்தொகை (2001) - 4,84,292 (குடியிருப்பு: 206,566, ரூர்கேலா:224,601)[2]
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads